தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sevvalai Rasu: 'என் குரல் போனதற்கு கலைஞர் தான் காரணம்' - மறைந்த செவ்வாழை ராசு பேட்டி

Sevvalai Rasu: 'என் குரல் போனதற்கு கலைஞர் தான் காரணம்' - மறைந்த செவ்வாழை ராசு பேட்டி

Aarthi V HT Tamil
May 18, 2023 01:05 PM IST

மறைந்த செவ்வாழை ராசு தன் குரல் எப்படி மாறியது என்பது குறித்து முன்பு தெரிவித்து இருந்தார்.

செவ்வாழை ராசு
செவ்வாழை ராசு

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் மறைந்த நிலையில் முன்பு கலைஞர் குறித்து பேட்டி அளித்திருந்த வீடியோ வைரலாகிறது. அதில், “நான் தொழில், அரசியல், விவசாயம், சினிமா என பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். விவசாயத்தில் பெரியதாக எந்த ஒரு லாபமும் எனக்கு கிடைக்கவில்லை.

விவசாயத்தில் பல முறை முதலீடுகள் செய்து நஷ்டம் அடைந்துவிட்டது. விளைச்சல், தண்ணீர் இல்லாமல் பல விளைச்சல் பட்டோம். அதனால் தான் விவசாயத்தை விட்டு விட்டு அரசியலுக்கு சென்றேன். நான் எம்ஜிஆரின் மிகப்பெரியரசிகர். அவருடைய கட்சியில் சேர்ந்தேன். எம்ஜிஆர் முதலமைச்சராக இருக்கும்போது நான் தேனி மாவட்டத்தில் பிரசிடன்ட்டாக இருந்தேன்.

அவர் கட்சிக்காக பயங்கரமாக உழைத்தேன். அவர் அட்சியில் ஒரு பதவி வாங்கிடலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் எனக்கு கல்வித் தகுதி இல்லை என்பதால் சீட் தரவில்லை.

அதற்கு பிறகு ஜெயலலிதா ஆட்சி வந்தது. ஜெயலலிதாவுக்கு பாதுகாவலராக இருந்தேன். எனக்கு அடிப்பட்டது. அப்போது மருத்துவமனை செலவு கூட ஜெயலலிதா அம்மா தான் செய்தார்.

அந்த அளவிற்கு ஜெயலலிதா அம்மா என்னை பார்த்தார். அவரும் எனக்கு கல்வி தகுதி இல்லை என்பதால் எம்எல்ஏ, எம்பி என எந்த ஒரு பதவியையும் கொடுக்கவில்லை. கடைசி வரைக்கும் என்னை ஒரு வேலைக்காரனாக கட்சியில் வைத்துவிட்டார்.

எனக்கு இந்த தொண்டை இந்த அளவிற்கு மாறியதற்கு காரணம் கலைஞர் தான். அவர் எம்ஜிஆரை திட்டுவார். என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவரை திட்டி என்னுடைய குரல் இப்படி மாறி கிழிந்துவிட்டது.

சின்ன வயதில் என்னுடைய குரல் அவ்வளவு அழகாக இருக்கும். அரசியலில் எந்த ஒரு உதவியும் கிடைக்காத விரக்தியில் தான் சினிமாவிற்கு வந்தேன். எனக்கு பாரதிராஜா தான் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். பாரதிராஜாவும், நானும் பங்காளி. பருத்திவீரன் படம் தான் என்னை மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த குரலை வைத்து தான் எனக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது” என்றார்.

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்