தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Seetha Raman: ரிலீஸான சேது, சுபாஷ்.. சீதா வைக்கப் போகும் செக்மேட்

Seetha Raman: ரிலீஸான சேது, சுபாஷ்.. சீதா வைக்கப் போகும் செக்மேட்

Aarthi V HT Tamil
Aug 09, 2023 12:20 PM IST

சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

சீதா ராமன்
சீதா ராமன்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சத்தியன் மற்றும் மீராவுக்கு நிச்சயதார்த்தம் செய்ய சீதா திட்டம் போட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

துரை வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்க ராமின் தங்கைகள் மூவரும் அப்பாவும் சித்தப்பாவும் வீட்டுக்கு வருவதால் தான் இந்த அலங்காரம் என நினைத்துக் கொள்ள துரை ஆமாம் ஆமாம் என்று அவர்களை நம்ப வைக்கிறார்.

சீதா இதையெல்லாம் பார்த்து சிரித்துக் கொண்டே அவளும் அப்படியே பில்டப் செய்கிறார். அதன் பிறகு மகாவும் அர்ச்சனாவும் ஸ்டேஷனுக்கு கிளம்பி வெளியே வர அலங்காரத்தை பார்க்க இந்த மூன்று பெண்களும் அப்பாவும் சித்தப்பாவும் வருவதால் தான் இந்த அலங்காரம் எல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

சீதா ஸ்வீட் செய்து கொண்டு வர மகாவுக்கும் அர்ச்சனாவுக்கும் சந்தேகம் வர வீட்டுக்கு பெரியவங்க வராங்க இல்லையா அதனால ஸ்வீட் செய்து இருக்கேன் என்று சொல்லி சமாளிக்க நீ என்ன பண்ணாலும் உனக்கு இந்த வீட்ல இன்னைக்கு தான் கடைசி நாள் என்று வார்னிங் செய்துவிட்டு கிளம்ப ராம் ஐயரை கூட்டி வர சந்தேகம் இன்னும் அதிகமாகிறது.

ஐயர் வீட்டுக்கு முக்கியமான நபர்கள் வருவதால் நல்ல நேரத்தில் வரவேற்க வேண்டும் என வந்ததாக சொல்கிறார். சேதுவும் சுபாஷுக்காகவும் தான் இந்த ஏற்பாடு என மகாவும் நம்பி வெளியே கிளம்புகிறாள்.

அடுத்து சீதா மீராவுக்கு மேக்கப் போட்டுக் கொண்டிருக்க இதை பார்த்து பெண்களுக்கு சந்தேகம் வந்து எதுக்கு கல்யாண பெண் மாதிரி மேக்கப் போடுறீங்க என்று கேட்க இருவரும் முழிக்கின்றனர். அதோடு எனக்கும் மேக்கப் போடணும் உங்களுக்கும் மேக்கப் போடணும் என்று சீதா சமாளிக்க இல்லை இல்லை எங்களுக்கு சந்தேகமா இருக்கு, நாங்க மகாவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டு வரோம் என்று சென்று விடுகின்றனர்.

மீரா இவங்க மகா கிட்ட சொல்லி ஏதாவது பண்ண போறாங்க என்று சொல்ல சீதா அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறாள்.

மறுபக்கம் ஸ்டேஷனுக்கு போன மகாவும் அர்ச்சனாவும் சுபாஷ் மற்றும் சேதுவை வரவேற்க அவர்கள் சீதா மீது பயங்கர கோபத்தில் இருக்கின்றனர். அவ என்ன பண்ணாலும் இன்னைக்கு அவள வீட்டை விட்டு வெளியே அனுப்பாம விடமாட்டேன் என்று சொல்கின்றனர்.

மறுபக்கம் சீதா ராமிடம் தங்கைகளை பற்றி சொல்ல அவன் நான் போய் என்னன்னு கேட்கிறேன் என்று கிளம்பிச் செல்கிறான்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்