Samantha: விவகார போஸ்!தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க
Samantha Dating Rumour: தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி பரவி வரும் நிலையில் இன்ஸ்டாவில் ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு வைரலாகியுள்ளது. அப்படி என்ன தான் இந்த விஷயம் என்பதை பார்க்கலாம்

தி பேமிலி மேன் இயக்குநருடன் டேட்டிங் வதந்தி..ஜாடை மாடையாக சமந்தா பகிர்ந்த பதிவு - என்னன்னு பாருங்க
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக இருந்து வரும் சமந்தா சிட்டாடல் வெப் தொடரின் வெளியீட்டை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இதற்கிடையே மயோசிடிஸ் நோய் பாதிப்பு காரணமாக நடிப்புக்கு குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு கம்பேக் கொடுத்திருக்கும் அவர், தெலுங்கில் பங்காரம் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்த படத்தை நந்தினி ரெட்டி இயக்குகிறார்.
தற்போது பங்காரம் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வரும் சமந்தா, வழக்கம் போல் தனது சமூக வலைத்தள பக்கத்திலும் ஏதாவது பதிவுகளை பகிர்ந்து வைரலாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
டேட்டிங் வதந்தி
சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் கடந்த வாரம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.