தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Salaar Ott: பிரமிக்க வைக்கும் விலையில் விற்பனையான சலார் ஓடிடி உரிமம்

Salaar OTT: பிரமிக்க வைக்கும் விலையில் விற்பனையான சலார் ஓடிடி உரிமம்

Aarthi V HT Tamil
Dec 22, 2023 10:30 AM IST

பிரபாஸின் சலார் படம் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளது.

பிரபாஸ்
பிரபாஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படம் இன்று (டிசம்பர் 22) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தின் ஓடிடி டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

படத்தின் ஓடிடி உரிமையை முன்னணி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி பெற்று உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் படம் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு பேரம் நடந்ததாக கூறப்படுகிறது. டிஜிட்டல் உரிமையில் இந்தப் படம் புதிய சாதனை படைத்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திரையரங்கில் வெளியாகி எத்தனை வாரங்கள் கழித்து இந்தப் படம், ஓடிடியில் வெளியாகும் என்பது சில நாட்களுக்குப் பிறகு தான் தெரியும்.

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் சலார் படத்தை ஹோம் பேல் பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ளார். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்து உள்ளார்.

பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பிரபாஸின் அம்மாவாக ஈஸ்வரி ராவ் தோன்றினார். தெலுங்கு நடிகர்கள் ஜெகபதி பாபு, எம்.எஸ்.சௌத்ரி, பிரம்மாஜி, ஷாபி, ஜான்சி, சப்தகிரி, 'போகரு' புகழ் ஸ்ரேயா ரெட்டி, தமிழ்ப் படங்களில் நடித்து புகழ் பெற்ற தெலுங்கு ஹீரோ பாபி சிம்ஹா, 'கே.ஜே.எஃப்' வில்லன் ராமச்சந்திர ராஜு, தமிழ் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

சலார் படம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சலார் படத்தின் மூலம் அனைத்து வசூல் சாதனைகளையும் கிளப்பிவிடும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்