Sai Pallavi: உறவு என்றுசொன்னால் நீதானே: தங்கையின் திருமணத்தில் தழுதழுத்த சாய் பல்லவி: எமோஷனல் மொமன்ட்ஸ்: வெளியான படங்கள்
Sai Pallavi: உறவு என்றுசொன்னால் நீதானே: தங்கையின் திருமணத்தில் தழுதழுத்த சாய் பல்லவி குறித்தும், எமோஷனல் மொமன்ட்ஸ் பற்றி வெளியான படங்கள் குறித்தும் பார்ப்போம்.
Sai Pallavi: நடிகை சாய் பல்லவி, அவரது சகோதரி பூஜா கண்ணனின் திருமணத்தில் இருந்தபோது கண்கலங்கி தழுதழுத்த படங்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.
மலையாளத்தில் 2015ஆம் ஆண்டு, ‘பிரேமம்’ என்னும் படத்தில் மலர் டீச்சர் என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் பரவலாக அறியப்பட்டவர், நடிகை சாய்பல்லவி. இந்தப் படத்துக்குப் பின், மலையாளத்தில் 'களி’ என்னும் படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தும் பிரபலமானார். அதன்பின், தெலுங்கு மற்றும் தமிழ்ப் படங்களில் தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார், நடிகை சாய் பல்லவி.
ரவுடி பேபி சாய் பல்லவியின் கதை:
தமிழில் தியா என்னும் படத்தில் அறிமுகமாகிய நடிகை சாய் பல்லவி, தனுஷுடன் சேர்ந்து ‘மாரி 2’ படத்திலும் நடித்தார். குறிப்பாக, இப்படத்தில் நடிகை சாய்பல்லவி ஆடிய ரவுடி பாடல் பட்டிதொட்டியெங்கும் இவரைக் கொண்டுபோய் சேர்த்தது. அதன்பின், நடிகர் சூர்யாவுடன் சேர்ந்து என்.ஜி.கே. என்னும் படத்திலும், பாவக்கதைகள் என்னும் ஆந்தாலஜி படத்தில் ‘ ஓர் இரவு’ என்னும் அத்தியாயத்திலும் நடித்தார். அதன்பின், தெலுங்கில் ஷியாம் சிங்க ராய் என்னும் படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர் நடித்த கார்கி படமும் இவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது.
இந்நிலையில் நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணனின் திருமணம் சமீபத்தில் செப்டம்பர் 5ஆம் தேதி ஊட்டியில் நடைபெற்றது.
அப்போது பூஜா கண்ணன் - வினீத் சிவக்குமார் ஆகிய இணையரின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தற்போது வெளியாகி வைரல் ஆகிவருகிறது. இருவரும் பாரம்பரிய மற்றும் எளிமையான வெள்ளை நிற ஆடைகளை அணிந்துள்ளனர்.
இந்த நிகழ்வில் சகோதரிகளான சாய் பல்லவியும், பூஜா கண்ணனும் ஆனந்தக்கண்ணீர்விட்டது பலரை அந்நிகழ்வுக்கே நம்மை அழைத்துச்சென்றது.
ஆனந்தக் கண்ணீரில் சாய் பல்லவி, பூஜா கண்ணன்:
தங்கள் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்ந்த பூஜாவின் கணவர் வினீத், அதில் ’முடிவிலிக்கு அப்பாற்பட்ட’ என்னும் தலைப்பிட்டு அதனைப் பகிர்ந்துள்ளார்.
முதலாவதாக, திருமண விழா முடிந்த பிறகு, பூஜாவும் வினீத்தும் நெருக்கமாக இருக்கும் ஒரு படம் இருக்கிறது. வினீத் முடிச்சு போடும்போது பூஜா ஆனந்தக் கண்ணீர் விடும் சில படங்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அடுத்தடுத்த சில படங்களில் சாய் பல்லவி மற்றும் சில குடும்ப உறுப்பினர்களால் ஆனந்தக்கண்ணீருடன் இருக்கும் சில காட்சிகள் உள்ளன. மேலும் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களைப் பற்றிய நுண்ணறிவையும் அப்படங்கள் தருகின்றன.
மேலும் சில படங்களை புகைப்படக்கலைஞர் எஷாந்த் பகிர்ந்துள்ளார். அதில் சாய் பல்லவி, தனது தங்கையை திருமணத்திற்கு பூஜாவை தயார் செய்யும் நிகழ்வுகள் இருக்கின்றன. வினீத்தின் குடும்ப வீட்டில் திருமணம் நடந்ததாகவும் புகைப்படக்காரர் தெரிவித்தார்.
நீலகிரி மலையில் உள்ள கிராமங்களில் நடைபெறும் திருமணங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான சம்பிரதாயங்களைப் பின்பற்றுகின்றன. படுகர் இன திருமணங்கள் வழக்கமாக மணமகனின் வீட்டில் நடைபெறுகின்றன. திருமணத்தின்போது சைவ உணவுகள் வழங்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்தவர்கள் சாய் பல்லவி மற்றும் பூஜா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரவிருக்கும் படைப்பு:
பூஜா 2021ஆம் ஆண்டு, சித்திரை செவ்வானம் என்னும் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன்பின்வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிகை சாய் பல்லவி கடைசியாக 2022ஆம் ஆண்டு கார்கி படத்தில் நடித்திருந்தார். தமிழில் சிவகார்த்திகேயனுடன் அமரன், தெலுங்கில் நாக சைதன்யாவுடன் தாண்டேல், ஜுனைத் கானுடன் பெயரிடப்படாத இந்தி படம், ரன்பீர் கபூருடன் ராமாயணம் ஆகியப் படங்களில் தற்போது நடித்து வருகிறார். வரும் அக்டோபர் 31-ம் தேதி அமரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது.