Redin Kingsley: அவமானங்களை நினைக்காதீங்க.. வேலையை பாருங்க.. என்னை இந்தளவுக்கு கொண்டுவந்தவர் இறையன்பு ஐயா தான் - ரெடின்
Redin Kingsley: அவமானங்களை நினைக்காதீங்க.. வேலையைப் பாருங்க.. என்னை இந்தளவுக்கு கொண்டுவந்தவர் இறையன்பு ஐயா தான் என காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி பேட்டியளித்துள்ளார்.
Redin Kingsley: அவமானங்களை நினைக்காதீங்க என்றும், வேலையைப் பாருங்க எனவும், என்னை இந்தளவுக்கு கொண்டுவந்தவர் இறையன்பு ஐயா தான் எனவும் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லில் கூறியுள்ளார்.
சென்னை தீவுத்திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நடந்து வருகிறது. அதை உருவாக்கியிருப்பவர், காமெடி நடிகர் ரெடின்கிங்ஸ்லி. கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான காமெடி நடிகராக வலம்வரும் ரெடின்கிங்ஸ்லி, பல ஆண்டுகளாக கண்காட்சியை உருவாக்கி தரும் நபராக தொழில் செய்துவருகிறார். அவரது இன்னொரு பக்கம் குறித்து சமீபத்தில் பிஹெண்ட்வுட்ஸ் ஊடகத்துக்கு அவரும் அவரது மனைவி சங்கீதாவும் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
முழுமையாக கண்காட்சி வைக்கிறதுக்கு என்னமாதிரியான சவால்களை எல்லாம் எதிர்கொண்டீங்க?
ரெடின்கிங்ஸ்லியின் பதில்: உங்களுக்கு இது அரசுடைய இடம். இப்படி கண்காட்சி பண்றதுக்கு லைசென்ஸ் வாங்கணும். தச்சர் வேலை இருக்கு, எல்லாமே போராட்டம் தான். கிட்டத்தட்ட 300 பேர் வேலைப் பார்த்தாங்க.
அரசு உடனடியாக ஓ.கே. சொன்னாங்களா?
ரெடின்கிங்ஸ்லியின் பதில்: வருஷத்துக்கு மூன்று தடவை அரசு இந்த மாதிரி கண்காட்சி பண்ணுது. எனக்கு இது பிறந்த மண் மாதிரி. அதனால், நான் ஒரு தடவையாவது பண்ணிடுவேன். கார்பெண்டர், மோல்டர் இவங்களை எல்லாம் வைச்சு, பண்றது கஷ்டம் தான். அது பழகிடுச்சு.
சங்கீதாவின் பதில்: நம் மனதில் ஒரு பிளான் வைச்சிருப்போம். அதை அவங்க கிட்ட புரிய வைச்சு, அதை கொண்டு வர்றதுதான் கஷ்டமான டாஸ்க்.
ரெடின்கிங்ஸ்லியின் பதில்:
சென்னையில் துபாய் குளோபல் வில்லேஜ் கான்செஃப்ட்டை 20 நாட்களில் செய்தோம். கிட்டத்தட்ட 300 பேர் வொர்க் பண்ணியிருக்காங்க. வெற்றிடமாக அரசு நம்மிடம் நிலத்தை மட்டும் கொடுப்பாங்க. அதை நாம் ரெடி செய்து காட்டணும்.
இந்த கண்காட்சியை உருவாக்க எவ்வளவு செலவாகியிருக்கும்?
ரெடின்கிங்ஸ்லி: இதை உருவாக்க ரூ.3.5 கோடி ஆகியிருக்கும். மேரேஜ் ஆகி நாங்க பண்ற முதல் கண்காட்சி, துபாய் குளோபல் வில்லேஜ் கான்செஃப்ட் தான். இதுதான், என் மனைவி பார்க்கிற முதல் புரொஜெக்ட். நாங்க லவ் செய்துட்டு இருக்கும்போதே நாலு புரொஜெக்ட்களில் ஒருங்கிணைப்புப் பணி எனக்காக வந்து பண்ணியிருக்காங்க. கணக்கு வழக்கு எல்லாம் கறாராக பார்ப்பாங்க.
காமெடியனுக்கு பின்னாடி இருக்கிற வலிகள் பயங்கரமாக இருக்கு? நிறைய வொர்க் பார்த்துருக்கீங்க. அதுபற்றி?
ரெடின்கிங்ஸ்லியின் பதில்: மக்களுக்கு எப்போதுமே எண்டெர்டெயின்மென்ட் கொடுத்துட்டு இருக்கணும். நான் சின்ன வயசிலேயே அடிப்படையில் டான்ஸர். அப்படி இருக்கும்போதே நிறைய ஷோக்கள் பண்ணியிருக்கேன். ஸ்டேஜ் ஷோ மட்டும் 500 ஷோ-வுக்கு மேல் பண்ணியிருப்பேன். அடுத்து ஈவன்ட் பண்ண ஆரம்பிச்சேன். அப்போது காக்னிஸன்ட், டி.சி.எஸ் எல்லாமே உள்ளே வருது. அந்த டைமில் ஒரு டீம் பேக்கேஜ் மாதிரி கொடுத்திடுவாங்க. பெரும்பாலான கார்ப்பரேட் ஷோக்கள் நான் தான் பண்ணியிருக்கேன். அடுத்து பப்ளிக் ஈவண்ட் பண்ண ஆரம்பிச்சேன்.
இறையன்பு ஐ.ஏ.எஸ். ஐயா அவர் தான் என்னை இந்தளவுக்கு கொண்டு வந்தவர். அவர் சுற்றுலாத்துறை செயலாளராக இருந்தபோது, நாங்க ஒரு கான்செஃப்ட் கொடுத்திருந்தோம். அதை அவர் பிடிச்சுப்போய் அப்ரூவல் பண்ணுனார். அவர் தான் நன்றாக ஊக்கப்படுத்தினார். இன்னிக்கு வரைக்கும் இந்த விஷயத்தை நான் பண்றேன் என்றால், அதுக்கு அவர் தான் காரணம்.
சக்ஸஸ்ஃபுல் பிஸினஸ் மேனாக எப்படி உணர்றீங்க?
ரெடின்கிங்ஸ்லியின் பதில்: நீங்கள் ஒரு ஸ்டெப்பை எடுத்து வைத்தாலே உங்களுக்கு அவமானங்கள் நடக்கும். நான் சக்சஸ் எல்லாம் ஆகலை. இது ஒரு ஜார்னி தான். இன்னும் நிறைய பண்ணவேண்டியது இருக்கு. நமக்கு நிறைய அவமானங்கள் வரும். அதை யோசிக்கக் கூடாது. வேலையை மட்டும் தான் பார்க்கணும். யாராவது ஒருத்தவங்க நெகட்டிவ் ஆக சொல்லத்தான் செய்வாங்க. நான் லாபமும் எடுத்திருக்கேன். நிறைய நஷ்டமும் பட்டிருக்கேன். இதையெல்லாம் தாண்டி தான் ஒரு இடத்துக்குப் போயிட்டு இருக்கேன்.
சங்கீதா: நான் இவரை லவ் பண்ணுனதுக்கு ஒரே காரணம் என்ன தெரியுமா. நெகட்டிவை காது கொடுத்துகேட்காதன்னு சொல்வார். கண்டுக்கவே கண்டுக்காதன்னு சொல்வார். உனக்கு என்ன பிடிக்குதோ, அதை பண்ணுனு சொல்வார். அது இதுன்னு சொல்ற கணவருக்கு மத்தியில் அவர் சொன்னது பிடிச்சிருந்தது. அப்படி தான் லவ் பண்ண ஆரம்பிச்சேன்'' என முடித்தனர், சின்னத்திரை நடிகை சங்கீதா மற்றும் நடிகர் ரெடின்கிங்ஸ்லி தம்பதியினர்.