Redin Kingsley செய்யும் பிசினஸ்.. காமெடி நடிகர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்.. ரெடின் கிங்ஸ்லி தம்பதி சொல்லும் வளர்ச்சி கதை!
Redin Kingsley செய்யும் பிசினஸ்.. காமெடி நடிகர் உருவாக்கிய சாம்ராஜ்ஜியம்.. ரெடின் கிங்ஸ்லி தம்பதி சொல்லும் வளர்ச்சி கதை!
Redin Kingsley: நடிகர் ரெடின்கிங்ஸ்லி செய்யும் பிசினஸ்.. காமெடி நடிகர் உருவாக்கிய பிசினஸ் சாம்ராஜ்ஜியம்.. ரெடின் கிங்ஸ்லி தம்பதியாக சொல்லும் கதை குறித்துப் பார்ப்போம்.
சென்னை தீவுத்திடலில் துபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி நடந்து வருகிறது. அதை உருவாக்கியிருப்பவர், நடிகர் ரெடின்கிங்ஸ்லி. கடந்த சில ஆண்டுகளாக முக்கியமான காமெடி நடிகராக வலம்வரும் ரெடின்கிங்ஸ்லி, பல ஆண்டுகளாக உருவாக்கி தரும் நபராக தொழில் செய்துவருகிறார். அவரது இன்னொரு பக்கம் குறித்து சமீபத்தில் பிஹெண்ட்வுட்ஸ் ஊடகத்துக்கு அவரும் அவரது மனைவி சங்கீதாவும் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம்.
’இரண்டு பேருமே பிஸியான நடிகர்கள். அதையெல்லாம், தாண்டி கண்காட்சி பண்ணனும்னு நினைச்சது எப்படி?
ரெடின்கிங்ஸ்லி: கண்காட்சி அமைக்கிறதுதான் என்னோட வேலை. அதுக்கப்புறம் தான் சினிமாவுக்கே போனேன். நான் இந்த துறைக்கு 15 வருடங்களில் 80 முதல் 90 கண்காட்சி பண்ணியிருப்பேன். நீங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க.. சென்னையில் பனிமலை கொண்டாட்டம், அமர்நாத் லிங்கம், இதெல்லாமே நான் பண்ணுனதுதான்.நீருக்கடியில் இருக்கும் மீன் உலகம் இதெல்லாம் நான் பண்ணுனதுதான். வருஷத்துக்கு ஏதாவது மாத்திட்டே இருக்கணும். இந்த தடவை, கல்யாணம் முடிச்சிட்டு துபாய் போய் இருந்தோம். அங்கே பார்த்தால், துபாய் குளோபல் வில்லேஜ்னு ஒன்னு இருக்கு. எக்ஸ்ட்ரா ஆர்டினரியா இருக்கும். 50-யில் இருந்து 100 ஏக்கரில் துபாய் அரசு அதை பண்ணியிருக்காங்க. அது ஒருநாளில் பார்க்கமுடியாது. மூன்று முதல் நான்கு நாட்கள் பார்த்தால்தான் முழுமையாகப் பார்க்கமுடியும். அந்த டைமில், என் வொய்ஃப் தான் சொன்னாங்க. அப்படி பண்ணுனதுதான், சென்னையில் துபாய் குளோபல் வில்லேஜ் மாதிரி.
பார்க்கும்போது கண்காட்சியை நேர்த்தியாகப் பண்ணியிருக்கீங்க. யாராவது சின்னதாக ஒரு கமெண்ட் பண்ணுனாலும் கஷ்டமாக இருக்கும் தானே?.
சங்கீதாவின் பதில்: நிறையபேர் தேனிலவுக்கு துபாய் போனதா சொல்றாங்க. நான் ஒரே ஒரு இடத்துக்குத்தான் போனேன். நான் போன, ஒரு இடம் துபாய் மட்டும் தான்.
ரெடின் கிங்ஸ்லியின் பதில்: டிசம்பர் 31ஆம் தேதி, இவங்களுக்குப் பிறந்தநாள். அப்போது கூட்டிட்டுப் போயிருந்தேன். எனக்கு ஜனவரி 2ஆம் தேதி சூட்டிங் ஆச்சே இங்கே. இரண்டு நாள் லீவு விடுவாங்க. ஒன்றாம் தேதி நைட்டே கிளம்பிவந்துட்டேன்.
சூட் ஒரு பக்கம் இருந்தாலும் மனைவி நமக்கு ரொம்ப முக்கியம். அவங்களை சந்தோஷமாக வைச்சுக்கிறது அதை விடமுக்கியம்.
சங்கீதா: கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட முதல் பிறந்தநாள். அதனால், நாங்கள் தடாலடியாக துபாய்க்கு டிக்கெட் போட்டுப் போனோம். நாங்க ரெண்டுபேருமே குளோபல் வில்லேஜ் கான்செஃப்ட் பார்த்தது இல்லை. அப்போது பார்த்துட்டு ஜஸ்ட் பேசுனோம். ஆனால், இதை நிஜமாக உருவாக்குவார்னு எதிர்பார்க்கலை. ரொம்ப ஹார்டு வொர்க் பண்ணுனார். அதை நேர்த்தியாக கொண்டு வர்றது ரொம்ப கஷ்டம்.
ரெடின்கிங்ஸ்லி: நானே 10 நாட்கள் சூட்டிங்கை பிரேக் பண்ணிட்டு தான், இதைப் பண்ணுனேன். இவ்வளவு வேலை பண்ணனும்னா, அதை சூட்டிங் போயிட்டு பண்ணமுடியாது. சூட்டிங் முடிச்சிட்டு, இதைப் பார்க்கணும்னா, ரொம்ப டல்லாகிடும்.
கணவர் நாம் ஆசைப்பட்டாலும் லேட்டாக செய்வாங்க. உங்க கணவர் அந்த மாதிரி கணவரா, உடனடியாக ரியாக்ட் செய்யக்கூடிய கணவரா?
சங்கீதாவின் பதில்: உடனடி ரியாக்ஷன்லாம் நடக்காது. பயங்கரமான ரியாக்ஷன் எல்லாம் காட்டி இருக்கேன். அதுக்கே அப்படியாமா, அப்படின்னு நார்மலாகப் போய்டுவார். சிலதை காது கொடுத்து கேட்கமாட்டார். நீங்கள் படத்தில் பார்க்கும் ஓவர் ரியாக்ஷன் எல்லாம் படத்தில் பார்க்கும்போது மட்டும் தான் வரும். ஃபேமிலி, வீடு என்றால் வேறமாதிரி தான்.
ரெடின்கிங்ஸ்லியின் பதில்: எனக்குத் தெரியலை. இதுக்கு மேல் என்ன பண்ணனும்.
சங்கீதா: அதை எல்லாத்தையும் மொத்தமாக படத்துக்கு கொட்டிடுறார். அதனால், வீட்டில் அது வரமாட்டியுது’’ என முடித்தனர், சின்னத்திரை நடிகை சங்கீதா மற்றும் நடிகர் ரெடின்கிங்ஸ்லி.
நன்றி: பிஹைண்ட்வுட்ஸ்
டாபிக்ஸ்