தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: 'வெற்றியை இப்படி எடுத்துக்கங்க.. என்னைவிட அழகானவங்க இருக்குறாங்க’ - ஓபனாகப் பேசிய ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna: 'வெற்றியை இப்படி எடுத்துக்கங்க.. என்னைவிட அழகானவங்க இருக்குறாங்க’ - ஓபனாகப் பேசிய ராஷ்மிகா மந்தனா

Marimuthu M HT Tamil
Apr 13, 2024 03:21 PM IST

Rashmika Mandanna: ராஷ்மிகா மந்தனா, வெற்றியை எவ்வாறு பார்க்கவேண்டும் என்பது குறித்து அவர் அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா (Instagram)

ட்ரெண்டிங் செய்திகள்

புஷ்பா: தி ரைஸ் மற்றும் சீதா ராமம் படங்களுக்குப் பிறகு, சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த அனிமல் படத்தில் ஹீரோயினாக நடித்ததன்மூலம் பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றியை ருசித்தார், நடிகை ராஷ்மிகா மந்தனா. ஆணாதிக்கம் சார்ந்த படம் என அனிமல் படம் விமர்சிக்கப்பட்டாலும், படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றிபெற்று நன்றாகவே ஓடியது. 

லைஃப்ஸ்டைல் ஆசியா ஊடகத்துடனான ஒரு நேர்காணலில், நடிகை ராஷ்மிகா மந்தனா, வெற்றியை ஏன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். அது இப்போது பேசுபொருளாகியுள்ளது. 

'இதை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதை நான் கற்றுக் கொண்டேன்'

லைஃப்ஸ்டைல் ஆசியா ஊடகத்திடம் பேசிய ராஷ்மிகா மந்தனா, மகிழ்ச்சியையோ அல்லது வெற்றியையோ லேசாக எடுத்துக் கொள்வதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், ஏனென்றால் தன்னை விட திறமையான அல்லது அழகானவர்கள் இருப்பதை அறிவேன் என்றும், தனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அதிகம் பயன்படுத்த விரும்புவதாகவும் கூறினார்.

இதுதொடர்பாக நடிகை ராஷ்மிகா மந்தனா கூறிய வார்த்தைகள், "என்னை விட அழகாகவும், திறமையாகவும் நிறைய பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனால், இன்று நான் இருக்கும் இடத்தில் இருக்க எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன். வாழ்க்கையில் எந்த மகிழ்ச்சியையும் அல்லது நீங்கள் அடையும் வெற்றியையும் லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. கடந்த சில ஆண்டுகளில் இதை நான் கற்றுக்கொண்டேன். தனக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை அதிகம் பயன்படுத்த விரும்பினேன்’’ என்றும் கூறினார். 

'நீங்கள் உறுதியாக இல்லையென்றால், அது உங்களைப் பாதிக்கும்’: 

அதே நேர்காணலில், ராஷ்மிகா மந்தனா, தனக்கு கிடைத்த வெற்றிக்குப் பின் இருக்கும் ஊடக வெளிச்சத்தில்,  தனது ஒவ்வொரு சாதாரண அசைவும், தன்னைப் பற்றிய பிம்பத்தைக் கட்டமைக்கிறது எனவும் மனம் திறந்து பேசியுள்ளார்.  எவ்வாறாயினும், இந்தத் துறையில் வரும் எல்லாப் பிரச்னைகளையும் சமாளிக்க ஒருவர் இறுக்கமாக சக்தியுடன் இருக்கவேண்டும் என்றும் ராஷ்மிகா சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக ராஷ்மிகா அளித்த பேட்டியில், "இந்த துறையில், நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால், உலகம் நம்மைக் கவனிக்கிறது.விமர்சனங்களையும் தருகிறது. இவர் இப்படித்தான், என்று பல கருத்துகளைக் கொண்டுள்ளது. இவையெல்லாம் சினிமா துறையில் மிகவும் சாதாரணமானது. இந்த மாதிரியான சூழல்களின்போது, நீங்கள் இறுக்கமான மனதுடனும் உடலுடனும் இல்லாவிட்டால், அது உங்களை மனரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் கடுமையாகவே பாதிக்கும். ஆனால், இதைப் பற்றி நமது ரசிகர்கள் மற்றும் மக்கள் அறிந்திருக்கவாய்ப்பில்லை’’ என்றார். 

ராஷ்மிகா நடித்து வரும் படங்கள்: இயக்குநர் சுகுமாரின் இயக்கத்தில் தயாராகி வரும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் ஸ்ரீவள்ளி என்னும் கதாபாத்திரத்தில் ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜூனுடன் சேர்ந்து தற்போது நடித்து வருகிறார். இந்தப் படம், ஆகஸ்ட் 15ஆம் தேதி, வெளியாகவுள்ளது. தவிர, ‘ரெயின்போ’ என்னும் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் ராஷ்மிகா நடித்துவருகிறார். மேலும், ராகுல் ரவீந்திரன், இயக்கும் ‘கேர்ள் ஃபிரெண்ட்’ என்ற தெலுங்கு படத்திலும், ‘சாவா’ என்ற இந்தி படத்திலும் நடித்து வருகிறார், ராஷ்மிகா மந்தனா. 'சாவா’ படத்தில்  விக்கி கெளஷல், அட்சய் கண்ணா, பிரதீப் ராவத் ஆகியோரும் நடித்து வருகின்றனர். 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்