Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவின் அதிரவைக்கும் சொத்து மதிப்பும்’ அவர் நிராகரித்த பெரிய பட்ஜெட் படங்களும் இதோ!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவின் அதிரவைக்கும் சொத்து மதிப்பும்’ அவர் நிராகரித்த பெரிய பட்ஜெட் படங்களும் இதோ!

Rashmika Mandanna: ‘ராஷ்மிகாவின் அதிரவைக்கும் சொத்து மதிப்பும்’ அவர் நிராகரித்த பெரிய பட்ஜெட் படங்களும் இதோ!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 06, 2024 10:41 AM IST

Rashmika Mandanna: ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் வணிக ரிதியாக அது வெற்றி படமாக மாறியது. இதற்கிடையில் 28 வயதான ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

‘ராஷ்மிகாவின் அதிரவைக்கும் சொத்து மதிப்பும்’ அவர் நிராகரித்த பெரிய பட்ஜெட் படங்களும் இதோ!
‘ராஷ்மிகாவின் அதிரவைக்கும் சொத்து மதிப்பும்’ அவர் நிராகரித்த பெரிய பட்ஜெட் படங்களும் இதோ! (Instagram)

சமீபத்தில் ராஷ்மிகா நடித்த அனிமல் திரைப்படம் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. ஆனால் வணிக ரிதியாக அது வெற்றி படமாக மாறியது. இதற்கிடையில் 28 வயதான ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. ராஷ்மிகா ஒரு படத்திற்கு ரூ.4 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இந்நிலையில் இவரது சொத்து மதிப்பு சுமார் 50 கோடி என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

'ராஷ்மிகா மந்தனா தற்போது தென்னிந்திய மொழி படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த காலங்களில் பல பெரிய பட்ஜெட் படங்களை ராஷ்மிகா மந்தனா நிராகரித்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த படங்கள் என்ன என்பது குறித்த தகவல்கள் இதோ!

ராம் சரண் மற்றும் ஷங்கரின் கூட்டணி கேம் சேஞ்சரில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிப்பதாக இருந்தது. ஆனால் அனிமல் மற்றும் புஷ்பா 2 படப்பிடிப்பில் பிஸியாக இருந்ததால் ராஷ்மிகாவால் கேம் சேஞ்சருக்கு தேதிகள் ஒதுக்க முடியவில்லை. அதனால் பெரிய பட்ஜெட் படத்தை கைவிட வேண்டியதாயிற்று.

தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் ராஷ்மிகா மந்தனா நடிப்பதாக இருந்தது. ஆனால் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் ராஷ்மிகா படத்தை நிராகரித்தார். ராஷ்மிகா மந்தனாவுக்கு பதிலாக மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்த படம் மாஸ்டர்.

ஜெர்சி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு குழந்தைக்கு தாயாக தனது இமேஜ் பொருந்தவில்லை என்று ராஷ்மிகா படத்தை கைவிட்டார்

‘விஜய் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டேவுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனாவின் பெயர் கதாநாயகியாக பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் கதை மற்றும் படத்தில் அவரது பாத்திரம் பிடிக்காததால் அவர் படத்திலிருந்து விலகினார்.

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இந்தி படத்தில் நடிக்க ராஷ்மிகாவுக்கு வாய்ப்பு கிடைத்தது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால், அவர் அந்த வாய்ப்பை கைவிட்டார்.

ராஷ்மிகா வின் அடுத்தடுத்த படங்கள்!

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகமாக புஷ்பா தி ரூல் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் இரண்டாம் பாகத்தில் ஸ்ரீவள்ளி தரிசனத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வரும் நிலையில், அந்த கெட்டப்பில் அவரது புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது. சிவப்பு நிற புடவை, கழுத்தில் நகைகள் என ராஷ்மிகாவின் புஷ்பா 2, ஸ்ரீவள்ளி லுக் என்று சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

புஷ்பா தி ரூல் படத்துக்கு பின்னர் தனுஷுடன் இணைந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தில் தெலுங்கு டாப் ஹீரோ நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தெலுங்கு சினிமா இயக்குநர் சேகர் கம்மூலா இயக்கும் இந்த படத்தில் தனுஷ் லுக் வெளியாகி வைரலானது. ராஷ்மிகாவின் கதாபாத்திரம் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.