தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika Mandanna: ‘ பொண்ணோட உடம்ப வச்சு ட்ரோல் பண்றவங்கள.. வேற எதையாவது வச்சு’ - கொதித்த ராஷ்மிகா மந்தனா!

Rashmika Mandanna: ‘ பொண்ணோட உடம்ப வச்சு ட்ரோல் பண்றவங்கள.. வேற எதையாவது வச்சு’ - கொதித்த ராஷ்மிகா மந்தனா!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 05, 2024 07:59 AM IST

பெண்களின் உடலை வைத்து ட்ரோல் செய்யும் மக்களை எனக்கு பிடிக்காது. நான் பேசும் வசனங்களையோ அல்லது வேறு எதையாவது வைத்து நீங்கள் ட்ரோல் செய்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன்.

ராஷ்மிகா மந்தனா!
ராஷ்மிகா மந்தனா!

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆன நிலையிலும், படத்தில் ஆணாதிக்கம் நிறைந்து காணப்படுவதாக எழுந்த சர்ச்சை, இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பான கேள்விகள், படத்தின் இயக்குநர், நடிகர்கள் என பலரிடம் முன்வைக்கப்பட்டது. 

அந்த வரிசையில், தற்போது இது தொடர்பான கேள்வி அண்மையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா மந்தனாவிடமும் வைக்கப்பட்டது. 

இது குறித்து பேசிய அவர், “ படத்தில் ரன்பீரின் கபூர் கதாபாத்திரத்திற்கு ஒரு விதமான பிரச்சினை இருக்கும். அந்த கதாபாத்திரம், அவரின் தந்தைக்காக எந்த எல்லைக்கும் செல்லும். படப்பிடிப்பு நடக்கும் போது, அது மட்டுமே என்னுடைய மனதில் இருந்தது. அதற்காக யாரும், எதனையும் செய்ய முடியாது. அது ஒரு கதை அவ்வளவே.

எந்த வித சாயமும் பூசாமல், உண்மையாக, சரியாக ஒரு படம் வேண்டும் என்றால் அது அனிமலாக இருக்கும். படத்தை பார்த்த பிறகு படம் பெண் வெறுப்பை பேசுகிறது அல்லது வேறு எதையாவது பேசுகிறது என்று, எதை வேண்டுமென்றாலும் சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால்,  உண்மையாக படம் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை ரசித்து கடந்து சென்று விடுங்கள்” என்று பேசினார்.

மேலும் அவரிடம், படத்தின் இறுதியில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா விவாதம் செய்யும் காட்சி நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த அவர்,  “பெண்களின் உடலை வைத்து ட்ரோல் செய்யும் மக்களை எனக்கு பிடிக்காது. நான் பேசும் வசனங்களையோ அல்லது வேறு எதையாவது வைத்து நீங்கள் ட்ரோல் செய்தால், அதை நான் ஏற்றுக்கொள்வேன். 

படப்பிடிப்பில் அந்த காட்சி எடுக்கப்படும் போது, செட்டில் இருந்த அனைவருக்கும் அந்த காட்சி பிடித்திருந்தது. ஆனால், ட்ரெய்லர் வெளியே வந்த உடன், நான் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டேன். ஆனால் படம் வெளிவந்த பின்னர், பெரும்பான்மையான ரசிகர்களுக்கு அந்த காட்சி பிடித்திருந்தது. அதை பார்த்த  போது, என்னுடைய உள்ளுணர்வு சரியாக இருந்ததை உணர்ந்தேன்.” என்று பேசினார். 

ராஷ்மிகா, 'புஷ்பா: தி ரூல்', 'தி கேர்ள் ஃபிரண்ட் ', 'ரெயின்போ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் புஷ்பா படப்பிடிப்பை முடித்துவிட்டு 'தி கேர்ள்பிரண்ட்' படத்தில் இணைந்து இருக்கிறார். இதற்கிடையே, ரெயின்போ படம் கைவிடப்பட்டதாக வதந்திகள் வந்தன. ஆனால் அதனை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பேட்டியில் பேசிய நபரின் தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இந்த தகவல்களுக்கும் ஹிந்துஸ்தான் தமிழ் இணையதளத்திற்கும் சம்பந்தம் கிடையாது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்