தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rashmika: பண மோசடி.. ராஷ்மிகாவை ஏமாற்றிய மேனேஜர்?

Rashmika: பண மோசடி.. ராஷ்மிகாவை ஏமாற்றிய மேனேஜர்?

Aarthi V HT Tamil
Jun 19, 2023 01:52 PM IST

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேலாளர் பண மோசடியில் ஈடுபட்டு உள்ளார்.

ராஷ்மிகா
ராஷ்மிகா

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் கடைசியாக விஜய்யுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்து இருந்தார். இதனால் அவர் தனது சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல்கள் சொல்கிறது.

நடிகை ராஷ்மிகா, ஹைதராபாத், கோவா, மும்பை, கூர்க் மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் ராஷ்மிகா விலை உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் நீண்ட நாட்களாக மேனேஜராக ஒருவர் வேலை பார்த்து வந்து உள்ளார். அவர் பல்வேறு சந்தர்பங்களில் பண மோசடியில் செய்த நிலையில் நடிகை ராஷ்மிகா அவரை உடனே வேலையை விட்டு நீக்கி உள்ளார். மொத்தமாக அவரின் மேனேஜர் 80 லட்சம் ரூபாய் பண மோசடி நடந்திருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து ராஷ்மிகா அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரையுலகில் இதுபோன்ற் வழக்குகள் நடப்பது முதல் முறையல்ல. சாண்டல்வுட்டிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததற்கு பல உதாரணங்கள் உண்டு. பாலிவுட்டிலும் உண்டே என்று பெயர் வைத்திருப்பவர்கள் உண்டு. தற்போது நடிகை ராஷ்மிகாவுக்கும் அதே அனுபவம் ஏற்பட்டது, இந்த வழக்கின் உண்மை வெளிச்சத்திற்கு வந்ததும், அவர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்