திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாரா.. அவனை அடிச்சதே நான் தான்.. கில்டு நிர்வாகி பரபரப்பு பேச்சு
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாரா.. அவனை அடிச்சதே நான் தான்.. கில்டு நிர்வாகி பரபரப்பு பேச்சு

திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாரா.. அவனை அடிச்சதே நான் தான்.. கில்டு நிர்வாகி பரபரப்பு பேச்சு

Marimuthu M HT Tamil
Oct 15, 2024 04:56 PM IST

திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாராம்.. அவனை அடிச்சதே நான் தான் என கில்டு நிர்வாகி சங்கர் பேசியது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாராம்.. அவனை அடிச்சதே நான் தான்.. கில்டு நிர்வாகி பரபரப்பு பேச்சு
திருடிட்டு ஜாக்குவார் தங்கம் 200 வருஷம் வாழ்வாராம்.. அவனை அடிச்சதே நான் தான்.. கில்டு நிர்வாகி பரபரப்பு பேச்சு

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கத்தில் (கில்டு) பத்து ஆண்டுகளாக தேர்தல் நடக்கவில்லை என்றும்; ஜாக்குவார் தங்கம் பல்வேறு ஊழல்களை செய்திருப்பதாகவும் பேட்டியளித்துள்ளனர்.

இதுதொடர்பாக பிங்கோ பாக்ஸ் யூட்யூப் சேனலில் கில்டு எனப்படும் தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயலர் துரை மற்றும் நிர்வாகி சங்கர் ஆகஸ்ட் மாதம் பேசிய வீடியோ வைரல் ஆகியுள்ளது.

அதில் முதலாகப் பேசிய துரை கூறுகையில், ‘’ஜாக்குவார் தங்கம் 2013ல் இருந்து 2018ஆம் ஆண்டு வரை சங்கத்தின் செயலாராகப் பணியாற்றியபோது, நிர்வாகிகளை அனுமதிக்காமல், தன் விருப்பம்போல் தான் மட்டுமே இருந்து செயலாற்றினார்.

எந்தவொரு உறுப்பினரும் சுதந்திரமாக சிறு படங்களின் டைட்டிலை பதிவு செய்ய முடியவில்லை. மீறி கேட்டால் அடிப்பார். இல்லையென்றால் சந்தா வாங்காமல் சங்கத்தில் இருந்து உறுப்பினர்களை நீக்கிவிடுவார். இப்படி நாங்கள் போராடி உள்ளே போகும்போது, போலீஸில் பாலியல் கேஸ் கொடுப்பது என பல முறைகேடுகளை சங்கத்தில் செய்திட்டே இருக்கார்.

ஜாக்குவார் தங்கம் கில்டு சங்க தேர்தலை நடத்தவிடாமல் தடுப்பதாகப் புகார்:

இந்த மாதிரி சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை எலெக்‌ஷன் நடக்கணும். அதை நடத்தவிடாமல் தடுத்துக்கொண்டே இருக்கார். 2015ல் தேர்தல் நடத்தவிடவில்லை. நாங்க கோர்ட்டுக்குப் போய் தேர்தல் நடத்துனோம். அப்போது கேட்கும் தயாரிப்பாளர்களுக்கு ஆன்லைனில் பட டைட்டில் பெறுவதற்கும் உதவி செய்யவில்லை. அதை வைத்து பணம் பறிக்க நினைத்தார். அப்படி ஏதாவது சங்கத்தின் நலன் கருதி தீர்மானம் கொண்டு வந்தால் தன்னிச்சையாக நீக்குவார். சங்க நிர்வாகக் குழுவில் 9 பேர் இருக்கணும்.

இதுவரை, கடந்த 6 வருஷமாக எந்தவொரு தீர்மானமும் சங்கத்தில் நிறைவேற்றவில்லை ஜாக்குவார் தங்கம். உறுப்பினர் சேர்க்கையில் கிடைக்கும் பணத்தை மட்டும் வாங்கி முறைகேடு செய்கிறார். மேலும், அந்த உறுப்பினர்கள் பதிவு நடந்தபின், சங்க உறுப்பினர்களைக் கூட்டம் கூட்டி, கலந்துபேசி உறுப்பினர் என உறுதிசெய்யவேண்டும். அதைச் செய்யாமல், புதிய உறுப்பினர்களை தேர்தல் நடந்தால் வாக்கு அளிக்க முடியாதவாறு வைத்துள்ளார், ஜாக்குவார் தங்கம். அதற்காக தேர்தல் வேண்டும். நிறையப் பேர் படம் எடுக்குறாங்க. அதை வியாபாரம் செய்ய வழிதெரியாமல் கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அவங்களுக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தணும்’’ என்கிறார்.

அதைத்தொடர்ந்து பேசிய நிர்வாகி கில்டு சங்கர் கூறுகையில், ’’படிக்கட்டு சந்தில் வைச்சு, எத்தனை பேரை ஜாக்குவர் தங்கம் அடிச்சிருப்பான். அவனை அடிச்சது நான் தான் பிரகடனம் செய்றேன்.

பல குடும்பத்தை கருவறுத்தவர் ஜாக்குவார் தங்கம்: கில்டு சங்கர்

பல குடும்பத்தை கருவறுத்துட்டான் ஜாக்குவார் தங்கம். எம்.ஜி.ஆர் வீட்டில் ஒருவேளை சாப்பிட்ட காகம் கூட புண்ணியம் செய்திருக்கும். எம்.ஜி.ஆர் பேரை சொல்ல ஜாக்குவார் தங்கத்துக்கு தகுதியில்லை. இப்பவும் சிக்கல. தப்பிச்சு ஓடினான்.

பணத்தை எடுத்துட்டுப் போயிட்டு, உழைச்சவங்க மேல் பழியைப் போடுறான். ஒன்றரை மணிநேரம் வேலை செய்யணுமாம். 200 வருஷம் வாழ்வாராம். அவன்கிட்ட போகர் இருக்கார்னு சொல்றான். எங்ககிட்ட அகத்தியரே இருக்கார்.

யாராவது பேசினால், வக்கீலை வைச்சு கேஸை போட்டுவிட்டுட்டுறது. யார் அப்பன் வீட்டுப்பணம். நம்ம பணங்க. சரியான ஆண் மகனாக இருந்தால் சங்கத்தின் தேர்தலை நடத்த வரணும். பத்து வருஷம் ஆகுதுங்க. தேர்தல் நடத்தினால் டெபாசிட் கூட வாங்கமாட்டான். திருடுனது பரவாயில்ல, விட்டுட்டுப்போயா அப்படிங்கிறோம். இருக்கிறதையாவது காப்பாத்திக்கிறோம்ன்னு சொல்றோம்.

100 தியேட்டர், ஒரு ஒரு காட்சி, படங்களை ரிலீஸ் செய்வோம். அதற்குப் பணத்தை நாமளே கட்டிடுவோம். வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் சின்ன படங்களை வெளியிடுவோம். ஸ்பான்சர் மட்டும் நாம் செய்வோம்.

இந்தியன் 2 படத்தை 400 கோடி ரூபாய்ப் போட்டு எடுத்திட்டு, நடுரோட்டில் நிற்கிறார், தயாரிப்பாளர். நம்மகிட்ட 400 கோடி ரூபாய் இருந்தால் 800 படம் எடுத்திருப்போம். கருத்துள்ள படங்கள் வராமல் போச்சுங்க. இந்த கில்டு சங்கத்தில் இருந்து வர்ற ஒவ்வொரு படமும் தரமாக வருதுங்க.

மத்தவங்க எல்லோரும் கார்ப்பரேட். பணம் போட்டால் பணம் எடுக்கணும். இந்த நிலையை மாத்தணும். நம்ம துரை அண்ணன் அணியோட ஒன்றுசேர்ந்து நின்று, இந்த தேர்தலைக் கொண்டு வந்திடுவோம்.

ஜாக்குவாரை தூக்கி எறிஞ்சிட்டால் போதும். ரத்தக்கறை படிந்த கை அவன் கை’’ என ஆவேசமாகப் பேசி முடித்தார், கில்டு நிர்வாகி சங்கர்.

நன்றி: பிங்கோ பாக்ஸ் யூட்யூப்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.