“அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா

“அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா

Kalyani Pandiyan S HT Tamil
Published Oct 13, 2024 07:21 AM IST

நடிகர் ரஞ்சித் செளந்தர்யாவிற்கு நெற்றியில் முத்தம் கொடுத்ததை யாரும் தவறாக நினைக்க வில்லை. அது முழுக்க, முழுக்க அன்பின் வெளிப்பாடு - பிரியா ராமன்!

“அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா
“அவர் ஒரு அப்பாவி.. செளந்தர்யாவிற்கு நெத்தியில ரஞ்சித் கொடுத்த முத்தம்; ரவீந்தர் ட்விஸ்ட் செய்து விட்டார் - பிரியா

பணத்திற்காக இல்லை

இது குறித்து அவர் பேசும் போது, “ரஞ்சித்திற்கு பணம், புகழ் எல்லாமே கிடைத்து விட்டது. ஆனாலும், அவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருப்பது ஏன் என்றால், அவரை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக. அது இயல்பாகவே ஒரு நடிகனிடம் இருப்பதுதான். ஆம், ஒரு நடிகனுக்கு நீங்கள் எவ்வளவு பாராட்டு கொடுத்தாலும், இன்னும் கொஞ்சம் கிடைக்குமா என்று தான் ஏங்குவான். அதுதான் ரஞ்சித்தின் இயல்பும்

ரஞ்சித் மனைவி
ரஞ்சித் மனைவி (பிஹைண்ட்வுட்ஸ் )

ரஞ்சித் உண்மையிலேயே அப்பாவி. அவர் பேசும் தங்கம், கண்ணு உள்ளிட்ட வார்த்தைகளெல்லாம், அவர் வளர்ப்பு முறையில் வந்தது தான். ஆனால் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது கொஞ்சம் புதுமையாக இருக்கிறது. காரணம், ரஞ்சித்தை அவர்கள் முன்னால் அப்படி பார்த்தது கிடையாது.

ரஞ்சித்திடம் ஒரு குவாலிட்டி இருக்கிறது. யாராவது இருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், அவர்களை நிதானப்படுத்தி, பிரச்சினையை சமாளிக்கும் திறன் அவருக்கு இருக்கிறது. காரணம் என்னவென்றால், அவர் வீட்டில் பெரிய பெரிய பிரச்சினைகளையெல்லாம் மிகவும் எளிதாக சமாளித்து இருக்கிறார். அதே நேரம் ரஞ்சித் மிகவும் எமோஷனலான நபரும் கூட.. அதனால் யாருக்கு, என்ன பிரச்சினை என்றாலும், அதனை அவர் உட்கார்ந்து பொறுமையாக கேட்பார். அந்த பிரச்சினைக்கு அவருக்கு தோன்றும் தீர்வை நிச்சயம் கொடுப்பார்.

 

ரவீந்தர் செய்த ட்விஸ்ட்

ப்ராங் விஷயத்தில், ரவீந்தர் உண்மையில் ட்விஸ்ட் செய்து விட்டார். அவர் முன்னமே ரஞ்சித்திடம் நீங்கள் இதில் பயங்கரமாக நடியுங்கள் என்றார். அதற்கு ஏற்றார் போலதான் ரஞ்சித் நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஆனால், ரவீந்தர் நாமினேஷனில் சேவ் பண்ண கூடிய விஷயத்தை அவர் தனியாக தர்ஷிகாவிடம் கூறிவிட்டார். அதற்கு தர்ஷிகா ரியாக்ட்டும் செய்திருந்தார்.

பிரியா ராமன்
பிரியா ராமன்

ஆனால், நேற்று முன் தினம் ரவீந்தர், தர்ஷிகாவும், தர்ஷா குப்தாவிற்கும் இடையேயான கேம்தான் இது என்றார். ஆனால், அந்த விஷயத்தை அவர் வெறுமனே ப்ராங்க் என்று சொல்லிவிட்டு கடந்து சென்று இருக்கலாம். ஆனால், அதற்கு ஒரு எக்ஸ்ட்ரா லேயரை அவர் உருவாக்கினார். அது பிரச்சினையாக உருவாகிவிட்டது. ஆரம்பத்தில் அது அப்படி கிடையாது. ரஞ்சித்திடம் இருந்து ஏதாவது கன்டென்ட் வாங்க வேண்டும். அதேபோல அவருடன் நான் ஸ்க்ரீன் ஸ்பேசை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுதான் ரவீந்தார் விரும்பினார்.

ரஞ்சித்திற்கு ஃபேக் கார்டு வந்ததும் என்னை மிகவும் பாதித்தது. அவர் உண்மையில் ஃபேக்காக இல்லை. அதற்கு காரணமாக, அவர் ரியாக்ட் செய்யக்கூடிய இடத்தில் இல்லை என்று நீங்கள் சொல்லி இருக்கலாம் அல்லது எடுத்தவுடன் கலகலவென பேச மறுக்கிறார் உள்ளிட்ட காரணங்களை நீங்கள் அடுக்கி இருக்கலாம்.

ஆண் பெண் என பிரித்ததிலேயே அவர் கொஞ்சம் ஜாக்கிரதையாக மாறிவிட்டார். அதிலேயே யார் மனதையும் அவர் புண்படுத்தக் கூடாது என்று அவர் முடிவு செய்துவிட்டார். அந்த விஷயத்தில் அவர் இன்னும் கொஞ்சம் அலர்ட்டாக இருந்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவர் சௌந்தர்யாவுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்ததை யாரும் வெளியே தவறாக பேசவில்லை. சௌந்தர்யா ஆரம்பத்தில் இருந்து அவர் அவராக இருக்கிறார். மற்ற பெண்கள் போல அவர் நடிக்கவில்லை நான் இப்படித்தான் இப்படித்தான் இருக்கிறேன் என்று ரீதியில் அவர் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கிறார்.” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.