ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணா
ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணாவின் செயல் வைரல் ஆகியுள்ளது.

ஒரு காலத்தில் எனக்கு அக்கா.. இப்போது அண்ணி.. மேடையில் சமந்தாவை வைத்து கலாய்த்த ராணா
ஒருகாலத்தில் எனது அக்காவாக இருந்து தற்போது அண்ணி ஆக மாறியிருக்கீங்க என நடிகை சமந்தாவை ராணா கலாய்த்த வீடியோ வைரல் ஆகியிருக்கிறது.
நடிகை சமந்தா - ராணா இடையே நடந்த வேடிக்கையான உரையாடலின் வீடியோ கிளிப் வைரலாகி வருகிறது. ஐஐஎஃப்ஏ உத்சவ் விருதுகள் வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக நடிகை சமந்தா ஆண்டின் சிறந்த பெண் என்ற விருதை வென்றார். விழாவில் அவர் உணர்ச்சி வசப்பட்டு உரையாற்ற முயன்றபோது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ராணா டகுபதி மற்றும் தேஜா சஜ்ஜா ஆகியோர் சில ஜோக்குகளை கூறி அவரை சிரிக்க வைக்க முயன்றனர். அது ஒர்க் அவுட்டும் ஆனது. இதனால் அரங்கமே சிரிப்பலையில் மிதந்தது.
ஐஐஎஃப்ஏ விருது வாங்கிய சமந்தாவிடம் அப்படி போகக்கூடாது சமந்தா என வம்பிழுத்தார், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ராணா டகுபதி.