ரஜினி - கமல் மோதல்..ஜப்பானில் வசூலை அள்ளிய தமிழ் படம், விஜயகாந்துக்கு திருப்புமுனை! இன்றைய நாளில் வந்த தமிழ் படங்கள்
தீபாவளி ரிலீசாக ரஜினி - கமல் மோதல், ஜப்பானில் வசூலை அள்ளிய தமிழ் படம் விஜயகாந்துக்கு திருப்புமுனை ஏற்படுத்திய படம் என இன்றைய நாளில் வந்த தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்

ரஜினி - கமல் மோதல்..ஜப்பானில் வசூலை அள்ளிய தமிழ் படம், விஜயகாந்துக்கு திருப்புமுனை, இன்றைய நாளில் வந்த தமிழ் படங்கள்
தமிழ் சினிமாவில் அக்டோபர் 23ஆம் தேதி முக்கிய நாளாகவே அமைந்துள்ளது. ரஜினி - கமலின் மோதல், விஜயகாந்தின் சூப்பர் ஹிட், மறைந்த இயக்குநர் சிகரம் பாலசந்தர் முதல் படம் போன்றவை இந்த நாளில் வெளியாகியுள்ளன.
தாழம்பூ
எம்ஜிஆர் - கேஆர் விஜயா நடிப்பில் ஜனரஞ்சகமான கதையம்சத்துடன் வெளியாக ரசிகர்களை கவர்ந்த படம் தாழம்பூ. என்.எஸ். ராமதாஸ் இயக்கியிருந்த இந்த படத்தில் எம்.ஆர். ராதா, எம்.என். நம்பியார், எஸ்.ஏ. அசோகன், நாகேஷ், மனோரமா உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
கொலை பழி சுமத்தப்பட்டு சிறை செல்லும் எஸ்.ஏ. அசோகனை காப்பாற்ற நிஜ குற்றவாளிகளை எம்ஜிஆர் கண்டுபிடிப்பது தான் படத்தின் கதை. கே.வி. மகாதேவன் இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 1965இல் வெளியான இந்த மாஸ் என்டர்டெயினர் படம் வெளியாகி இன்றுடன் 59 ஆண்டுகள் ஆகிறது