Turbo on OTT: ஆக்ஷன் காமெடி..சென்னையை பின்னணியாக கொண்ட மலையாள படம்! மம்முட்டி நடித்த டர்போ ஓடிடி ரிலீஸ் விவரம்
டர்போ திரைப்படம் இந்த ஆண்டில் மம்முட்டி நடிப்பில் மூன்றாவது படமாக வெளியாகி, ஹாட்ரிக் ஹிட்டாகவும் அமைந்துள்ளது. ஆக்ஷன் காமெடி பாணியில், சென்னையை பின்னணியாக கொண்ட மலையாள படம் ஆக இருக்கும் டர்போ சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது.

சென்னையை பின்னணியாக கொண்ட மலையாள படம், மம்முட்டி நடித்த டர்போ ஓடிடியில் ரிலீஸ்
மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மாறுபட்ட நடிப்பில் கடந்த மே மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதுடன், விமர்சக ரீதியாக பாராட்டையும் பெற்ற படம் டர்போ. ஆக்ஷன் கலந்த காமெடி படமான இதை வைசாக் இயக்கியுள்ளார்.
மதுர ராஜா படத்துக்கு பிறகு மம்முட்டி - வைசாக் கூட்டணி இந்த படத்தில் நடித்துள்ளது. இந்த படத்தில் மம்முட்டியுடன் அஞ்சனா ஜெயப்பிரகாஷ், ராஜ் பி ஷெட்டி, ஷபரேஷ் வர்மா, சுனில், கபீர் சிங், நிரஞ்சனா அனூப், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சரவணன் உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.
ஓடிடி ரிலீஸ்
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கோடை விடுமுறையில் டர்போ படம் வெளியானது. படம் ரசிகர்களை கவர்ந்ததோடு பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டைய கிளப்பியது.
