Tamil Remake: இந்தி ரீமேக்..ஆஸ்கர் சென்ற படம்! தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பேசிய குருதிப்புனல்-tamil cult classic kuruthipunal become hindi remake of drohkaal - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Remake: இந்தி ரீமேக்..ஆஸ்கர் சென்ற படம்! தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பேசிய குருதிப்புனல்

Tamil Remake: இந்தி ரீமேக்..ஆஸ்கர் சென்ற படம்! தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பேசிய குருதிப்புனல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 15, 2024 12:07 AM IST

Best Tamil Remake: இந்தி ரீமேக்காக உருவாகியிருந்தாலும் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட படமாக இருக்கும் குருதிப்புனல், தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பற்றி நுணுக்கமாக பேசிய கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படமாக உள்ளது.

Tamil Remake: இந்தி ரீமேக்..ஆஸ்கர் சென்ற படம்! தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பேசிய குருதிப்புனல்
Tamil Remake: இந்தி ரீமேக்..ஆஸ்கர் சென்ற படம்! தீவிரவாதம் பின்னணியில் இருக்கும் அரசியல் பேசிய குருதிப்புனல்

இதற்கு முக்கிய காரணமாக நக்சலைட்கள் பற்றி தமிழில் வந்த முழு நீள படமாகவும், பாடல்கள் இல்லாமல் விறுவிறுப்பான திரைக்கதையுடன் குருதிப்புனல் படம் அமைந்திருந்தது தான்.

கல்ட் அந்தஸ்தை பெற்றிருக்கும் இந்த படம் இந்தி ரீமேக்காக உருவான குருதிப்புனல் படம், 68வது ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆஸ்கர் என்ட்ரியாக அனுப்பப்பட்டது.

இந்தி ரீமேக்

பாலிவுட் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கோவிந்த் நிஹ்லானி இயக்கித்தில் ஓம்பூரி, நஸ்ருதீன் ஷா, மிடா வஷிஷ்ட், ஆஷிஷ் வித்யார்த்தி, அம்ரீஷ் பூரி என முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம் துரோகால்.

இரக்கமற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நேர்மையான எண்ணத்துடன் இருக்கும் காவல்துறை அதிகாரிகள் அனுபவிக்கும் மன மற்றும் உளவியல் அதிர்ச்சியை கொண்ட கதையம்சத்தில் இந்த படம் உருவாகியிருக்கும்.

இந்த படத்தில் தான் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தனது பாலிவுட் பயணத்தை தொடங்குவதாக இருந்தது. ஆனால் சில தொழில்நுட்ப பிரச்னைகளால் அவரால் இசையமைக்க முடியாமல் போனது.

துரோகால் கதையை தமிழுக்கு ஏற்றார் போல் மாற்றி அமைத்து ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுத்த படமாக குருதிப்புனல் அமைந்திருந்தது.

நக்சலைட்கள் பற்றிய கதை

நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நக்சலைட்களால் ஆபத்துகளும், பாதிப்புகள் காலம் காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நக்சலைட்கள் ஊடுறுவல், பாதிப்பு என்பது மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் குறைவுதான் என்றாலும், நக்சல் அமைப்புகளின் தீவிரத்தனம், அவர்களின் கொள்கை உள்பட பல்வேறு விஷயங்கள் இந்த படத்தில் பேசப்பட்டது.

படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை கமல்ஹாசன் எழுதியிருப்பார். கமல், அர்ஜுன் போலீஸ் அதிகாரிகளாகவும், நாசர் நக்சல் இயக்க தலைவனாகவும் நடிப்பில் மிரட்டியிருப்பார்கள். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கவனத்தை பெறும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதை, ஆழமான அரசியல், நச் வசனங்களுடன் சிறந்த கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்றுள்ளது.

நறுக் அரசியல் வசனங்கள்

வீரம்ன்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கறது, துப்பாக்கில பிறக்கிற புரட்சி துப்பாக்கியால சாகும், நான் எந்த உறுத்தலும் இல்லாம உன்னைக் கொல்ல முடியும். ஆனா உன்னால முடியாது. உதவாக்கரை சட்டமும் மிடில்கிளாஸ் மனசாட்சியும் உன்னை உறுத்தியே சாகடிச்சிடும், ஒருத்தனை அவனோட பொறுமையோட எல்லைக்கே கொண்டு போனா தீவிரவாதியா மாறிடறான், எல்லாத்துக்கும் ஒரு பிரேக்கிங் பாயின்ட் இருக்கு போன்ற படத்தில் இடம்பெறும் பல வசனங்கள் அரசியல் எதார்த்தத்தை எடுத்து கூறும் விதமாக அமைந்தன.

இதே போல் டால்பி ஸ்டீரியோ என்ற சவுண்ட் டெக்னாலஜி அறிமுகம் செய்யப்பட்ட முதல் தமிழ் படம் என்ற பெருமையும் பெற்றது.

பான் இந்தியா அளவில் அங்கீகாரம் பெற்ற ரீமேக்

இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுக்காக அனுப்புவதற்கு தேர்வான படமாக குருதிப்புனல் இருந்தது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான இரு மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. தீவராவதமும், அதை சுற்றி இருக்கும் அரசியலும் பேசிய படமாக அமைந்திருந்த நிலையில், படத்தில் பாடல்கள் இடம்பெறவில்லை. ரேஸ் போல் செல்லும் திரைக்கதைக்கு ஏற்ப இசையமைப்பாளர் மகேஷ் மிரட்டலான பின்னணி இசை அமைத்திருப்பார். பான் இந்தியா அளவில் பேசு பெருளாக மாறிய குருதிப்புனல் படம் தமிழில் வெளியான சிறந்த ரீமேக் படமாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.