மழையாவது புயலாவது.. எல்லாத்தையும் அசராமல் லெப்ட் ஹேண்டில் டீல் செய்த வேட்டையன்.. மழை இல்லன்னா வசூல் இன்னும் அள்ளுமோ!
மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் பல காட்சிகளுக்கு ரசிகர்கள் வருவது குறையத் தொடங்கியது. இந்த நிலையில் படம் முதல் 7 நாட்களில் ரூ.270 முதல் 275 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவான படம் வேட்டையன். இந்த படம் வெளியாகி நேற்றுடன் 7 நாட்கள் ஆகிறது. தமிழகத்தில் சென்னை தொடங்கி பல பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக கனமழை பெற்று வருகிறது. கடந்த 15ம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. இந்த நிலையில் வேட்டையன் படம் வசூல் எப்படி இருக்கும் என்ற அச்சம் படக்குழுவினர் இடையே ஏற்பட்டது. ஆனால் மழை,புயலை எல்லாம் லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்து வேட்டையன் வசூல் சாதனை படைத்துள்ளது.
வேட்டையன் பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்
வேட்டையன் படம் வெளியாகிய முதல் 4 நாட்களில் 240 கோடி வரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. பின்னர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல் பட்டு ஆகிய மாவட்டங்களில் பல காட்சிகளுக்கு ரசிகர்கள் வருவது குறையத் தொடங்கியது. இந்த நிலையில் படம் முதல் 7 நாட்களில் ரூ.270 முதல் 275 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மழை மட்டும் இல்லாமல இருந்தால் வசூல் இன்னும் அதிகரித்திருக்கும் என்ற ஆதங்கத்தில் படக்குழு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கதையின் கரு என்ன?
கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.
அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.
அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!
வேட்டையன் சொல்லும் நீதி என்ன?
கடந்த படத்தில், பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த த. செ. ஞானவேல் இந்தப்படத்தில் என்கவுண்டர் சரியா? தவறா?.. தாமதமான நீதியின் பலன்...? நீட் தீர்வால் ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் உள்ளிட்டவற்றை விவாதமாக எடுத்து முன் வைத்திருக்கிறார். படத்தில் என்கவுண்டருக்கு ஆதரவாக ரஜினியும், அதற்கு எதிராக அமிதாப்பும் நடக்கும் வாக்குவாதங்கள் மிக முக்கியமானவை..
குறிப்பாக, "சட்டம் கொடுப்பது நீதியா.. இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? ".. " விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி" .. " துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை" "குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?" "போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது" "மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் " உள்ளிட்ட வசனங்களில் இயக்குனருக்கே உரித்தான டச் இருந்தது.
ஆரம்பத்தில் ரஜினி படமாக ஆரம்பிக்கும் திரைப்படம்,.சிறிது நேரத்தில் முழுக்க, முழுக்க ஞானவேல் படமாக மாறி விடுகிறது. என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில், நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணில் இருக்கும் கார்ப்பரேட் பணப்பேராசை அனைத்தையும் அப்பட்டமாக போட்டு கிழித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயன்று இருக்கிறார் இயக்குனர். அதனால்தான் என்னவோ சில இடங்களில் பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக இருந்தது அது நம்மை நெழியவும் வைத்தது.
அனிருத் இசை தேவையான அளவு இருக்கிறது. ஆனால், ரசிகர்களின் கூஸ் பம்ப்ஸ் மொமன்ட்டுகளுக்கான அனிருத் டச் மிஸ்ஸிங்.. கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை எட்டும் படத்தில் இருக்கும் அதிகப்படியான டீ டெயிலிங் சில இடங்களில் அயர்ச்சியை கொடுக்கிறது. ரஜினியின் கண்ணாடி மொமன்ட்.. ரவுடி கும்பலை தூக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் ரஜினி பேசும் இடங்கள் செயற்கைத்தனமாக இருந்தது.
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
டாபிக்ஸ்