Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை..! தனுஷின் ராயன் செய்த சம்பவம்-raayan becomes first film crossing got a cetificate in censor collected rs 150 crore in box office which becomes record - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan Box Office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை..! தனுஷின் ராயன் செய்த சம்பவம்

Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை..! தனுஷின் ராயன் செய்த சம்பவம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 15, 2024 07:18 AM IST

Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனையை தனுஷின் ராயன் படம் செய்துள்ளது. வெற்றிகரமாக மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடி வரும் ராயன் ரூ. 200 கோடி வசூலை நெருங்கியுள்ளது.

Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை
Raayan Box office Record: பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எந்த படமும் நிகழ்த்திடாத தனித்துவ சாதனை

சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ் உள்பட பலரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கேங்கஸ்டர் படமான ராயன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

வசூலில் தனித்துவ சாதனை

இதையடுத்து படம் வெளியாக மூன்று வாரங்கள் ஆகியிருக்கும் நிலையில் தற்போது வரை ரூ. 150 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்து சாதனை புரிந்துள்ளது. விரைவில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது

இதற்கிடையே சென்சாரில் ஏ சர்டிபிக்கேட் பெற்று ரூ. 150 கோடிக்கு மேல் வசூலை ஈட்டிய முதல் படம் என வசூலில் தனித்துவ சாதனையை ராயன் படம் பெற்றுள்ளது. படத்தின் அளவுக்கு அதிகமான வன்முறை காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கும் விதமாக ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.

அந்த வகையில் குடும்ப படமாக இல்லாதபோதிலும் வசூலையும் படம் அள்ளியுள்ளது.

ராயன் ஓடிடி ரிலீஸ்

தனுஷ் இயக்கியிருக்கும் இரண்டாவது படமான ராயன் வெளியாகி 17 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில், ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் விடியோ வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த மாத தொடக்கத்தில் அமேசான் ப்ரைமில் ராயன் ஸ்டிரீம் ஆகும் என தெரிகிறது.

இதற்கிடையே படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் படமானது சன் நெக்ஸ்ட் ஓடிடியிலும் ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், அவர்களின் சொந்த ஓடிடி தளமான சன்நெக்ஸ்டிலும் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷுக்கு நன்றி

ராயன் படத்தின் தனுஷின் சகோதரி கார்த்திகா தேவியின் கணவர் போலீஸாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதையடுத்து தனது கணவருக்கு வாய்ப்பு அளித்த தம்பி தனுஷுக்கு, கார்த்திகா தேவி நன்றி கூறி இன்ஸ்டாவில் பகிர்ந்த போட்டோ வைரலானது. தனுஷுக்கு நன்றி தெரிவித்து அவர் நீண்ட பதிவையும் பகிர்ந்திருந்தார்.

ராயன் படத்துக்கு அங்கீகாரம்

திரையிலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃபி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தனுஷின் ராயன் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்திய படங்களாக அமீர்கான் நடித்த லகான், ஷாருக்கான நடித்த சக் தே இந்தியா உள்பட பல படங்கள் இடம்பிடித்துள்ளன.

கடந்த ஆண்டில் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பார்க்கிங் திரைப்படமும் இந்த ஆஸ்கர் நூலகத்தில் இடம்பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வரும் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் அவரது 50வது படமான ராயன் இந்த லிஸ்டில் இணைந்திருப்பது பெருமைக்குரியை விஷயமாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.