Oppenheimer Movie OTT: சூப்பர் அப்டேட்.. 7 ஆஸ்கர் விருது பெற்ற ஓப்பன்ஹைமர் திரைப்படம் இனி ஓடிடி-யில்.. எதில் தெரியுமா?-7 oscar winning oppenheimer films now in ott - HT Tamil ,புகைப்பட செய்திகள்
தமிழ் செய்திகள்  /  புகைப்பட தொகுப்பு  /  Oppenheimer Movie Ott: சூப்பர் அப்டேட்.. 7 ஆஸ்கர் விருது பெற்ற ஓப்பன்ஹைமர் திரைப்படம் இனி ஓடிடி-யில்.. எதில் தெரியுமா?

Oppenheimer Movie OTT: சூப்பர் அப்டேட்.. 7 ஆஸ்கர் விருது பெற்ற ஓப்பன்ஹைமர் திரைப்படம் இனி ஓடிடி-யில்.. எதில் தெரியுமா?

Mar 21, 2024 07:00 AM IST Divya Sekar
Mar 21, 2024 07:00 AM , IST

  • 96 வது அகாடமி விருதுகளில் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹாலிவுட்டின் ஓப்பன்ஹைமர் திரைப்படம், இப்போது ஓடிடி அரங்கில் நுழைந்துள்ளது. எந்த ஓடிடி எப்போது பார்ப்பது என்பது குறித்து இங்க பார்க்கலாம்.

96 வது அகாதமி விருதுகளில், ஓப்பன்ஹைமர்  13 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு ஏழு பிரிவுகளில் விருதை வென்றது.

(1 / 6)

சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த படத்தொகுப்பு, சிறந்த பின்னணி இசை மற்றும் சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் விருதுகளை இப்படம் வென்றது. 

(2 / 6)

இப்போது, அதே ஓப்பன்ஹைமர்  திரைப்படம் நீண்ட காலத்திற்குப் பிறகு ஜியோ ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்குகிறது. இதனை ஜியோ சினிமா அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. 

(3 / 6)

அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படும் புத்திசாலித்தனமான அமெரிக்க இயற்பியலாளர் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர், இரண்டாம் உலகப் போரின்போது அணுகுண்டை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். 

(4 / 6)

இப்படத்தில் ராபர்ட் ஹெய்மராக சிலியன் மர்பி நடிக்கிறார். தனது நடிப்பிற்காக 96 வது அகாதமி விருதையும், கோல்டன் குளோப் விருதுகளில் எட்டு விருதுகளையும் வென்றார். 

(5 / 6)

கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படத்தில் சிலியன் மர்பி, எமிலி பிளண்ட், மேட் டாமன், புளோரன்ஸ் பக், ராபர்ட் டவுனி ஜூனியர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது இன்று (மார்ச் 21) முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும். 

(6 / 6)

மற்ற கேலரிக்கள்