Raayan on OTT: ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஆஸ்கர் நூலகத்தில் திரைக்கதை..! ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்-raayan on ott when and where to expect dhanush starrers streaming release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Raayan On Ott: ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஆஸ்கர் நூலகத்தில் திரைக்கதை..! ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்

Raayan on OTT: ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஆஸ்கர் நூலகத்தில் திரைக்கதை..! ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 08, 2024 06:42 PM IST

தனுஷின் 50வது படமான ராயன் ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அள்ளியிருக்கும் நிலையில், ஆஸ்கர் நூலகத்தில் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகி இருப்பது தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாக அமைந்தது. தற்போது படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்
ரூ. 100 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ராயன் ஓடிடி ரிலீஸ் முக்கிய தகவல்

கேங்ஸ்டர் ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ராயன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. விமர்சக ரீதியாகவும் படத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த படத்தில் தனுஷுடன், நடிகர்கள் சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, பிரகாஷ் ராஜ், எஸ்.ஜே. சூர்யா, இயக்குநர் செல்வராகவன், சரவணன் உள்பட பலரும் நடித்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வரவேற்பை பெற்ற நிலையில், ரிலீஸுக்கு பிறகு பின்னணி இசை வெகுவாக பேசப்பட்டு வருகிறது.

ராயன் ஓடிடி ரிலீஸ்

இதையடுத்து படம் வெளியாகி 10 நாள்களுக்கு மேல் ஆகியிருக்கும் நிலையில் ராயன் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் ரிலீஸுக்கு பின்னர் இதன் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் விடியோ வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே அடுத்த மாத தொடக்கத்தில் அமேசான் ப்ரைமில் ராயன் ஸ்டிரீம் ஆகும் என தெரிகிறது.

இதற்கிடையே படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து படக்குழு சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அதேசமயம் படமானது சன் நெக்ஸ் ஓடிடியிலும் ரிலீஸாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், அவர்களின் சொந்த ஓடிடி தளமான சன்நெக்ஸ்டிலும் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சன் டிவியில் ஒளிபர்பபான நிலையில், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகி வருகிறது. இதில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் தனுஷ் ஆகியோர் ஸ்டேஜ்ஜில் பெர்பார்ம் செய்தது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது

ராயன் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்

இந்த படம் ரிலீஸ் நாளில் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், அடுத்தடுத்த நாள்களில் நேர்மறையான கருத்துகள் பகிரப்பட்டன. இதனால் படத்தின் வசூலும் கணிசமாக அதிகரிக்க தொடங்கின. முதல் வார முடிவில் ராயன் திரைப்படம் உலக அளவில் ரூ. 70 கோடிக்கு மேல் வசூலித்தது. தற்போது படம் ரூ. 110 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஆஸ்கர் குழுவால் ராயன் படத்துக்கு அங்கீகாரம்

திரையிலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகளை வழங்கும் அகாடமி ஆஃபி மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் தனுஷின் ராயன் படத்தின் திரைக்கதை இடம்பெற தேர்வாகியுள்ளது. இதற்கு முன்னர் இந்திய படங்களாக அமீர்கான் நடித்த லகான், ஷாருக்கான நடித்த சக் தே இந்தியா உள்பட பல படங்கள் இடம்பிடித்துள்ளன.

கடந்த ஆண்டில் ராம்குமார் பாலகிருஷ்ணா இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பார்க்கிங் திரைப்படமும் இந்த ஆஸ்கர் நூலகத்தில் இடம்பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக இருந்து வரும் தனுஷ் நடித்து, இயக்கியிருக்கும் அவரது 50வது படமான ராயன் இந்த லிஸ்டில் இணைந்திருப்பது பெருமைக்குரியை விஷயமாக மாறியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.