தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pushpa 2: புஷ்பா எங்க? - படக்குழு வெளியிட்ட அதிரடி வீடியோ!

Pushpa 2: புஷ்பா எங்க? - படக்குழு வெளியிட்ட அதிரடி வீடியோ!

Aarthi V HT Tamil
Apr 05, 2023 12:00 PM IST

புஷ்பா 2 படத்தின் அறிவிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது.

புஷ்பா 2
புஷ்பா 2

ட்ரெண்டிங் செய்திகள்

அல்லு அர்ஜுனின் பிறந்தநாள் ஏப்ரல் 8 ஆம் தேதி என்பதால், புஷ்பா தயாரிப்பாளர்கள் காம்செப்ட் வீடியோவை அவர் பிறந்தநாள் பரிசாக கொடுக்க முடிவு செய்து உள்ளனர்.

இந்நிலையில் புஷ்பராஜ் சிறையில் இருந்து தப்பிக்கிறார். அவன் எங்கே சென்றான்? 'புஷ்பா.. தி ரூல்' படம் தொடர்பான அறிவிப்பு இம்மாதம் 7ஆம் தேதி மாலை 4:05 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்த ஷெட்யூலுக்குப் பிறகு, அல்லு அர்ஜுன் பாங்காக்கில் உள்ள பிரமாண்ட செட்டில் இணைவுள்ளார். அங்கு சுமார் 30 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த 30 நாட்களில் சுமார் 40% படப்பிடிப்பு முடிவடையும் என படக்குழுவினர் தெரிவித்து உள்ளனர்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சுகுமார் இயக்குகிறார். புஷ்பா தி ரூல் படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. முதல் பாகத்தை விட பெரிய அளவில் இதன் தொடர்ச்சியை சுகுமார் திட்டமிட்டுள்ளார். இதில் ஃபஹத் ஃபாசில், அனசூயா, சுனில் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற படங்களின் தொடர்ச்சியான சூப்பர் டூப்பர் ஹிட்களின் பின்னணியில், புஷ்பா தி ரூல் படமும் இதே போன்ற பரபரப்பை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்