அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்

அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்

Marimuthu M HT Tamil
Nov 22, 2024 08:19 PM IST

அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்

அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்
அஜித் சாரை அவமானப்படுத்திய இயக்குநர்.. அஜித்துக்கு பரிந்துரை செய்த எஸ்.ஏ.சி.. தயாரிப்பாளர் பாலாஜி பிரபு தகவல்

இதுதொடர்பாக மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனலுக்கு தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அளித்த பேட்டியில், ‘’ அஜித் சாரை நான் முதன்முதலாக சந்தித்தது சுவாரஸ்யமான தகவல். அதாவது ஒரு பிரபலமான இயக்குநருடைய பிறந்தநாள் விழாவுக்கு அஜித் சார் அழைக்கப்பட்டிருக்காங்க. அங்கு நானும் போயிருந்தேன். அப்போது உதவி இயக்குநரிடம் அஜித் வந்ததும், தான் வந்ததை இயக்குநரிடம் சொல்லும்படி, சொல்கிறார். ஆனால், அந்த இயக்குநர் அதைக் கண்டுகொள்ளாமல் மது விருந்தில் ஆர்வமாக இருக்கிறார். பின் சிறிதுநேரம் கழித்து அஜித் மீண்டும் அந்த இயக்குநரை சந்திக்க உதவி இயக்குநரிடம் சொல்லி அனுப்புகிறார்.

சிறிதுநேரத்தில் வெளியில் வரும் அந்த உதவி இயக்குநர்,டைரக்டர் சார் நாளைக்கு உங்களை வந்து பார்க்கச் சொன்னார் எனச் சொல்லிவிடுகிறார். இதனால் பொக்கேவுடன் ஆத்திரப்பட்டு எழும் அஜித் குமார், ‘One Day Will Come' எனச் சொல்லிவிட்டு கோபத்துடன் கிளம்புகிறார். அது தான் நான் அஜித்தை முதன்முதலாகப் பார்த்தது. அடுத்து விஜய் சாரை வைத்து விஷ்ணு படம் எடுத்து ஹிட் கொடுத்திருந்தோம். அப்போது விஜய் சாரை வைத்து ஒரு படம் பண்ணலாம் என்று முடிவு செய்திருந்தோம். எஸ்.ஏ.சந்திர சேகர் சாரும் அப்படி தான் உறுதியாக இருந்தார்.

விஜய்யின் தந்தை அஜித்துக்கு செய்த பரிந்துரை:

ஆனால், வேறு ஒரு படத்தில் அவர்கள் பிஸியாக இருந்ததால், அவர்களால் எங்களுக்கு கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் விஜய் மாதிரி ஒருத்தர் வருகிறார், அஜித் என்று பெயர். அவரை வைத்து ஒரு படம் பண்ணிவிட்டு வாருங்கள். அந்த கேப்பில் நாங்களும் கமிட்டான படத்தை முடித்துவிடுவோம் எனச் சொல்கிறார். அப்போது வான்மதி சூட்டிங்கில் இருக்கும் அஜித் சாரை நானும் அப்பாவும்போய் பார்த்தோம்.

அப்போது இருவரும் நன்கு பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அஜித் சார் 10 லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டார். எங்களுக்கு அதற்கு முன்புதான், விஷ்ணு படத்தில் விஜய் சாருக்கு ரூ.3 லட்சம் தான் சம்பளம் கொடுத்திருந்தோம் என்றும், ரூ.5 லட்சம் தந்துவிடுவதாகச் சொன்னோம். அப்போது அவருக்கு சில பணத்தேவைகள் இருந்ததால் எங்களுக்கு அவர் பண்ணமுடியாமல் போய்விட்டது.

அடுத்து பிரசாந்த்தை ரீச் செய்து காதல் ரோஜாவே படத்தின் கதையைச் சொன்னோம். எல்லாம் ஓகே ஆகி, பிரசாந்துக்கு ரூ.2 லட்சம் அட்வான்ஸ் கொடுத்துவிட்டோம். ஆனால், படபூஜைக்கு பிரசாந்த் வரவில்லை. இரண்டு நாட்கள் கழித்து அவரது தந்தையை அழைத்துக்கொண்டு வந்தார். அப்போது தியாகராஜன், பிரசாந்தின் கால்ஷீட்டை ஷங்கர் சார் ஒரு மூன்று வருடங்களுக்குக்கேட்டிருக்கிறார் என்றும், ஒரு அப்பா ஸ்தானத்தில் இருந்து உதவ வேண்டும் என்றும் எனது அப்பாவிடம் கேட்டுக்கொண்டார். அப்போது எனது அப்பா விட்டுக்கொடுத்து, நல்லமுறையில் போய் செய்த படம் தான், ஜீன்ஸ்.

விஸ்வரூபம் பூஜா குமாரை அறிமுகப்படுத்தினோம்: தயாரிப்பாளர் பாலாஜி பிரபு!

அடுத்து செம்மீன் ஷீலாவின் பையன் ஜார்ஜ் விஷ்ணு மற்றும் விஸ்வரூபம் பூஜா குமாரை வைத்து நாங்கள் செய்த படம் தான், காதல் ரோஜாவே. இப்படத்தில் எங்களுக்கு ரூ.1 கோடி நஷ்டம்.

அப்போது அஜித் சார் விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருக்கிறார். நிறைய தயாரிப்பு நிறுவனங்களில் பணம் அட்வான்ஸாகக் கொடுத்திட்டு திருப்பி வாங்கிட்டாங்க. அப்போது நான் போய் அவரை மருத்துவமனையில் பார்க்கிறேன்.

அப்போது ஷாலினி பயந்துட்டாங்க. அஜித் சார் தைரியமாக இருந்தாங்க. நான் தைரியம் சொல்லிட்டு வந்தேன். அடுத்து அஜித் சாரை பார்க்கமுடியவில்லை. அஜித் சாரை பொறுத்தவரை ஜென்டில் மேன்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது, அஜித் சார். தான் கஷ்டப்படும்போது நிறைய தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழைத்துச்சென்று உதவிய சுரேஷ் சந்திராவை மனதில் வைத்து தற்போது வரை தனது மேனேஜராக வைத்து அழகு பார்ப்பவர், அஜித் சார்.

அஜித் சாரை அவமானப்படுத்திய டைரக்டர் பெயர் என்னவென்றால், ஒரு அணையின் பெயரை எடுத்தவர். அவரை கடைசி வரை அஜித் சார் கண்டுகொள்ளவே இல்லை.(அப்படிப் பார்த்தால் அமராவதி என்பது தான் அணையின் பெயர். அமராவதி படத்தின் இயக்குநர் செல்வா என்பது குறிப்பிடத்தக்கது.)’’ என தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசினார்.

நன்றி: மீடியா சர்க்கிள் யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.