ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. வெளியே கால்கடுக்க நிற்க வைத்த பிரபல இயக்குநர்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - பாலாஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. வெளியே கால்கடுக்க நிற்க வைத்த பிரபல இயக்குநர்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - பாலாஜி

ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. வெளியே கால்கடுக்க நிற்க வைத்த பிரபல இயக்குநர்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - பாலாஜி

Kalyani Pandiyan S HT Tamil
Nov 19, 2024 04:00 PM IST

சேரில் இருந்து வேகமாக எழுந்த அஜித் கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னிடம் இருந்த பொக்கேவை அந்த உதவி இயக்குனரிடம் கொடுத்துவிட்டு, “ஒன் டே வில் கம்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்த அந்த ஹோட்டலை விட்டு சென்றார். - பாலாஜி

ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. வெளியே கால்கடுக்க நிற்க வைத்த பிரபல இயக்குநர்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - பாலாஜி
ஷூட் ரூமில் சரக்கு பார்ட்டி.. வெளியே கால்கடுக்க நிற்க வைத்த பிரபல இயக்குநர்.. வளர்ந்து வன்மத்தை தீர்த்த அஜித் - பாலாஜி

ஷூட் ரூமுக்குள் பார்ட்டி

இது குறித்து அவர் பேசும் போது, “இந்த சம்பவம் 1995 ஆம் ஆண்டில் நடந்தது. அந்த காலத்தில் மிகவும் பிரபலமான இயக்குநர் ஒருவரின் பிறந்தநாள் விழா, ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அவருக்கு வாழ்த்து தெரிவிக்க அஜித்தும் பொக்கே உடன் வந்திருந்தார். அப்போது அந்த இயக்குநர் ஹோட்டலில் இருந்த ஷூட்ரூமில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குநர்கள், நடிகர்கள் இசையமைப்பாளர்கள் உடன் பார்ட்டி செய்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து அங்கு சென்ற அஜித், அந்த இயக்குநரின் உதவியாளரை அழைத்து, தான் வந்திருப்பதாக இயக்குநரிடம் சொல்லுங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த உதவி இயக்குநர் அஜித்தை உட்கார வைத்துவிட்டு, அந்த செய்தியை இயக்குனரிடம் சொல்வதற்காக ரூமுக்குள் சென்றார். ஆனால், உள்ளே சென்ற உதவி இயக்குநர் கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக வெளியே வரவே இல்லை.

ஒரு கட்டத்தில் அவர் வெளியே வந்தார். அப்போது அவரை அழைத்த அஜித் சார், நான் வந்தேன் என்று சாரிடம் சொன்னீர்களா அதற்கு அவர் என்ன சொன்னார் என்று கேட்டார். அதற்கு அந்த உதவி இயக்குநர், நீங்கள் வந்திருப்பதை நான் இயக்குனரிடம் சொல்லி விட்டேன்; இருப்பினும் இன்னொரு முறை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன் என்று கூறி மீண்டும் ரூமுக்குள் சென்றார்.

அஜித் குமார்
அஜித் குமார்

பார்க்க முடியாது

இரண்டு நிமிடத்தில் வெளியே வந்த அந்த உதவியாளர், அஜித்திடம் சார் இப்போது பிஸியாக இருக்கிறாராம்; அதனால் இன்னொரு நாளில் உங்களை சந்திக்கிறேன் என்று சொல்லச் சொன்னார் என்று கூறினார். இதைக்கேட்ட அஜித்திற்கு கோபம் கொப்பளித்தது.

இதனையடுத்து சேரில் இருந்து வேகமாக எழுந்த அஜித் கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னிடம் இருந்த பொக்கேவை அந்த உதவி இயக்குனரிடம் கொடுத்துவிட்டு, “ஒன் டே வில் கம்” என்று கூறிவிட்டு வேகமாக நடந்த அந்த ஹோட்டலை விட்டு சென்றார்.

அஜித்குமார்
அஜித்குமார் (இந்தியன் எக்ஸ்பிரஸ்)

பின்னாளில் அஜித் சார் மிகப்பெரிய உயரத்தை அடைந்தார். அப்போது அந்த பிரபல இயக்குநர் அஜித்தை வைத்து படம் செய்ய அவ்வளவு முயற்சிகளைச் செய்தார். ஆனால், கடைசி வரை அந்த இயக்குநரை அவர் பக்கத்தில் சேர்க்கவே இல்லை. அதுதான் அஜித் உடைய குணம்” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.