ஸாரிப்பா.. அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம்.. மன்னிப்புக்கேட்ட தயாரிப்பாளர்!
அமரன் படத்தில் மாணவரின் செல்போன் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்ட விவகாரம்.. மன்னிப்புக்கேட்ட தயாரிப்பாளர்!
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் படத்தின் ஒரு காட்சியில் கவனக்குறைவாக, பொறியியல் மாணவர் வி.வி.வாகீசனின் மொபைல் எண்ணை காட்டியதற்காக தயாரிப்பாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளிவந்த படம் ’அமரன்’. இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தைத்தயாரித்து இருந்தது. அதுமட்டுமின்றி, சோனி பிக்ஸர்ஸ் இணைத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
நிஜ கேரக்டரில் நடித்து நடிகர்கள்:
சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் என்னும் நிஜ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த ’அமரன்’ படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாகத் தோன்றியிருந்தார்.
இந்நிலையில் அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி பரவலான வரவேற்பினைப் பெற்றது. இதுவரை உலகளவில் ரூ.320 கோடி வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு லாபமான படமாக மாறியிருக்கிறது. அமரன் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியான வசூலைத் தந்தது. இப்படி பலரின் இதயங்களை வென்ற அமரன் திரைப்படம், வரும் டிசம்பர் 5ஆம் தேதியான இன்று நெட்ஃபிளிக்ஸில் திரையிடப்பட்டது. அதன்பின்னும் பல திரையரங்கில் இப்படத்தை எடுக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் ஓட்டி வருகின்றனர்.
அமரன் படத்தில் காட்டப்படும் செல்போன் எண்:
இந்நிலையில், அமரன் படத்தில் காட்டப்படும் ஒரு செல்போன் எண் எல்லா இடங்களிலும் வைரலாகி வந்தது. அந்தப் படத்தில் ஒரு காட்சியில், சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் மீது ஒரு துண்டு காகிதத்தை வீசுகிறார். பின்னர் அதில் ஒரு எண் இருக்கும். படத்தில் காட்டப்பட்டுள்ள மொபைல் எண் சென்னையில் உள்ள பல்கலைக்கழக மாணவர் வாகீசனுக்கு சொந்தமான எண் என்பது பின்னர் தெரியவந்தது. அந்த எண் படத்தில் காட்டப்படுவதால், அது சாய்பல்லவியின் எண் என நினைத்து, அவருக்கு தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளன.
இதனால் அந்த மாணவனுக்கு அடிக்கடி போன் கால் சென்று, அவர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இந்த காட்சியால் ஏற்பட்ட "சொல்லமுடியாத கஷ்டங்கள் மற்றும் மன உளைச்சலுக்கு" மாணவர் வாகீசன் ரூ .1.1 கோடி இழப்பீடு கோரி மாணவர் தயாரிப்பாளருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (ஆர்.கே.எஃப்.ஐ) நிறுவனம், தனது அலட்சியத்திற்கு மன்னிப்பு கோரியுள்ளது.
அமரன் திரைப்படம் ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. புஷ்பா 2 டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இன்றைய நிலையில், அமரன் உள்பட பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன.
டாபிக்ஸ்