Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!-jason sanjay film update raajkamal films statement and other top 10 cinema news on 09 september 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 சினிமா நியூஸ்!

Karthikeyan S HT Tamil
Sep 09, 2024 08:32 PM IST

Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட், மனசிலாயோ பாடல் ரிலீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை உள்பட டாப் 10 சினிமா செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்.

Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 நியூஸ்
Top 10 Cinema News: ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் அப்டேட் முதல் ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை வரை - டாப் 10 நியூஸ்

இயக்குநர் அமீர்

திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களை கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும் என்பதோடு, கல்வி நிறுவனங்களில் திரைக் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும் என்றும் தமிழக முதல்வரை நான் வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்” என இயக்குநரும், நடிகருமான அமீர் தெரிவித்துள்ளார்.

தி கோட் படத்தின் Director`s Cut ஓடிடி-யில் வெளியாகும்

சமீபத்தில் நேர்காணலில் கலந்துக் கொண்ட இயக்குநர் வெங்கட் பிரபு, தி கோட் படம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துக் கொண்டார். அதில் அவர் கூறியதாவது, "விஜய் சாருக்கு திரைப்படம் மிகவும் பிடித்து இருந்தது. படத்தின் டைரக்டர் கட்- இன் நேர அளவு 3 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். இதை கண்டிப்பாக ஓடிடி-யில் வெளியிடுவோம்." என கூறியுள்ளார்.

வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் வெளியானது

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' படத்தின் முதல் சிங்கிள் 'மனசிலாயோ' தற்போது வெளியாகி இருக்கிறது. மறைந்த பாடகர் மலேஷியா வாசுதேவனின் குரல் ஏஐ மூலமாக இந்த பாடலில் பயன்படுதப்பட்டு இருக்கிறது.

விஜய் சேதுபதிக்கு சம்பளம் எவ்வளவு?

பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சுமார் ரூ.50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கு முன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசனுக்கு, சுமார் ரூ.120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டில்லி பாபு காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான டில்லி பாபு காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள திரையுலகினர், “புதுமுக, இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்தவர் டில்லி பாபு” என புகழாரம் சூட்டியுள்ளனர்.

மனைவி ஆர்த்தியை பிரிவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு

நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். - நடிகர் ஜெயம்ரவி!

வெங்கட் பிரபுவை வாழ்த்திய அஜித்

நடிகர் அஜித்குமார், 'கோட் நல்லா இருக்குன்னு கேள்விப்பட்டேன். வாழ்த்துக்கள்' என தன்னிடம் சொன்னதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பான்-இந்தியன் திரைப்படத்தை இயக்கும் ஞானவேல்

'வேட்டையன்' இயக்குநர் டி.ஜே. ஞானவேல், சரவண பவன் ராஜகோபால் - ஜீவஜோதி வழக்கை அடிப்படையாக கொண்டு 'Dosa King' என்ற பெயரில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். Badhaai Do மற்றும் Raazi போன்ற படங்களை தயாரித்த ஜங்கிலி பிக்சர்ஸ் இந்த காவியக் கதையை பெரிய திரைக்கு கொண்டு வர ஞானவேல் உடன் இணைந்துள்ளது. டி.ஜே.ஞானவேல் மற்றும் ஹேமந்த் ராவ் ஆகியோரால் எழுதப்பட்ட, இந்த பான்-இந்தியன் திரைப்படம் ஜீவஜோதி மற்றும் பி. ராஜகோபாலின் மோதலால் ஈர்க்கப்பட்டு, லட்சியம், அதிகாரம் மற்றும் நீதிக்கான போருக்கு களம் அமைக்கிறது. ஜீவஜோதி சாந்தகுமாரின் (Life Rights) உரிமையை ஜங்கிலி பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் அறிக்கை

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்காக எந்த ஒரு காஸ்டிங் ஏஜென்டுகளையும் நாங்கள் நியமிக்கவில்லை. நாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் செய்திகள் எவ்வகையில் உங்களை வந்தடைந்தாலும் அதை நம்ப வேண்டாம் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.