நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசம் செய்த இயக்குநர்..எப்போ நடவடிக்கை எடுப்பீங்க? நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டு
நடிகையை கர்ப்பமாக்கி வாழ்க்கையை நாசம் செய்த இயக்குநர் பற்றி எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை பூனம் கவுர். இந்த விவகாரத்தில் எப்போ நடவடிக்கை எடுப்பீங்க? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தெலுங்கு, தமிழ் சினிமாக்களில் ஹீரோயினாக நடித்தவர் பூனம் கவுர். தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி உள்பட சில படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது அவர் சினிமாக்களில் நடிக்கவில்லை என்றாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இவர் தெலுங்கு சினிமா பிரபல இயக்குநர் ஒருவர் நடிகையை கர்ப்பமாக்கி, அவரது வாழ்க்கையை நாசம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதில் நடிகை அல்லது இயக்குநர் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
முன்னதாக, இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ், தெலுங்கு சினிமா பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதுதொடர்பாக அவர் பல்வேறு பேட்டிகளிலும் பேசியிருந்தார்.
பூனம் கவுர் குற்றச்சாட்டு
"தெளிவுபடுத்தல் - கரு உருவாக்கி, கருச்சிதைவை ஏற்படுத்தி பெண்ணின் வாழ்க்கையை தொலைத்தது நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர் இல்லை. அதை செய்தது இயக்குநர் தான்.
அந்த பஞ்சாபி நடிகைக்கு உதவ தெலுங்கு சினிமா நடிகர்கள் சங்கமான மா (மூவி ஆர்டிஸ்ட் அசோசியேஷன்) முயற்சித்தது. எனது பெயரும், நடிகரும், அரசியல்வாதியான அவரும் அரசியல் உள்நோக்கத்துக்காக தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளனர்" என குறிப்பிட்டுள்ளார்.
திரிவிக்ரமிடம் கேள்வி கேளுங்கள்
சமீபத்தில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் மீதான பாலியல் புகார் புயலை கிளப்பியிருக்கும் நிலையில், அதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை பூனம் கவுர், "குற்றவாளியான ஷேக் ஜானியை இனி மாஸ்டர் என்று அழைக்ககூடாது. மாஸ்டர் என்ற வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்" என்று எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அப்போது மற்றொரு பதிவில், "இயக்குநர் திரிவிக்ரம் சீனிவாஸ் மீதான எனகு புகாரை தெலுங்கு நடிகர் சங்கத்தினர் தீவிரமாக எடுத்து கொண்டிருந்தால், நான் உள்பட பலரு் அரசியல் துன்புறுத்தலை சந்தித்திருக்க மாட்டோம். நான் அமைதியாக புறக்கணிக்கப்பட்டேன். எனக்கு எந்த ஆதரவும் கிடைக்கவில்லை. திரையுலகில் இருக்கும் பெரியவர்கள் திரிவிக்ரமிடம் கேள்வி கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார்.
உண்மையில் நடந்ததை சொல்லவில்லை
இந்த விவகாரத்தில் தெலுங்கு சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் சிட்டிபாபு, “பூனம் கவுர் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால், இது வரை அலுவலகம் வந்து புகார் கொடுக்கவில்லை. பல முறை அலுவலகத்துக்கு வருமாறு அழைத்தாலும் வரவில்லை. புகாரும் எழுதி கொடுக்கவில்லை. உண்மையில் என்ன நடந்தது என்று சொல்லவில்லை” என்று தெரிவித்தார்.
பெண் மீது பழி போட முயற்சி
இதற்கு, “நீங்கள் திரிவிக்ரம் சீனிவாஸிடம் கேள்வி கேட்கவில்லை. அவரை கேள்வி கேட்க முடியாது. நான் உங்களை போல் பொய்யர் இல்லை. முதுகெலும்பில்லாதவள் அல்ல. என்னைப் பற்றி கருத்து கூறாமல் திரிவிக்ரமைக் கேள்வி கேட்க உங்களுக்கு தைரியம் இருக்கிறதா? இவர் தவறு நிகழ்ந்தற்கு பெண் மீது பழி போட முயற்சிக்கிறார்” என பூனம் கவுர் ரியாக்ட் செய்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் அவிழ்த்துவிடப்படாத முடிச்சாக இருந்து வரும் இந்த விவகாரம் உண்மை என்னவாக இருக்கும் என்பது மில்லன் டாலர் கேள்வியாகவே இருந்து வருகிறது.
டாபிக்ஸ்