Poonam Kaur: அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட பூனம் கவுர்
சமந்தாவை தொடர்ந்து பூனம் கவுர் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்.
நாயகி பூனம் கவுர் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னைப்போல் ஒருவன், வெடி உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். சினிமாவை விட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஃபைப்ரோ மயால்ஜியா என்ற அரிய நோயால் பாதிக்கப்பட்ட அவர் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது "பரவலான தசைக்கூட்டு வலியுடன் கூடிய சோர்வு, தூக்கம், நினைவாற்றல் மற்றும் மனநிலை மாற்றம்" ஆகிய பிரச்னைகளை கொண்டிருக்கும். இதற்கு அறிகுறிகளைக் கண்டறிந்து வாழ்க்கை முறையை மாற்றி, உடற்பயிற்சி, தெரபிகள் மற்றும் சிகிச்சைகளை கட்டாயம் எடுத்து கொள்ள வேண்டுமாம். வாழ்நாள் முழுவதும் அதோடு அவர் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
பூனம் கவுருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கடுமையான உடல் வலி இருந்ததாக அவருக்கு நெருக்கமான ஒருவர் தெலுங்கு ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
தற்போது ஹீரோயின்கள் இதுபோன்ற அரிய நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். சமந்தா ஏற்கனவே மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
டாபிக்ஸ்