Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக

Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 04:03 PM IST

Mohan G: பழநி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை கலந்துள்ளதாக இயக்குநர் மோகன் ஜி கூறியதில் எந்தத் தவறும் இல்லை. அவர் கூறியதை தவறாக புரிந்துகொண்டு இந்த கைது சம்பவம் நடந்துள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக
Mohan G: இதுல என்ன தப்பு இருக்கு... உங்களுக்கு புரிஞ்சிக்க தெரியல... பாய்ந்து வரும் பாமக

இந்தக் கருத்திற்கு பல தரப்பட்ட மக்களிடமிருந்கது கண்டனம் எழுந்த நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டார். இதற்கு முதலில் பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

தற்போது மோகன் ஜி கைது செய்யப்பட்டது அநீதி. அவர் கூறியதில் எந்தத் தவறும் இல்லை என பாமக நிறுவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அரைகுறை புரிதல்

இதுதொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். அந்தப் பதிவில், திரைப்பட இயக்குனர் மோகனை அரைகுறை புரிதலுடன் கைது செய்வதா? என காவல்துறைக்கும், தமிழக முதல்வருக்கும் கோரிக்கை வைத்த நிலையில், மோகன் ஜி-யை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எந்தத் தவறும் இல்லை

மேலும், தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற கோயில் ஒன்றின் பஞ்சாமிர்தம் குறித்து யு-டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் அளித்ததற்காக திரைப்பட இயக்குனர் ஜி.மோகன் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரைகுறை புரிதலுடன் திருச்சி மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

இயக்குனர் மோகன் அளித்த நேர்காணலை பார்த்தவர்களுக்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாகத் தெரியும். யு-டியூப் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், "புகழ்பெற்ற கோயில் ஒன்று தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தத்தில் ஆண்மைக்குறைவு மாத்திரைகள் கலக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த பஞ்சாமிர்தம் தரமற்றது என்று கூறி அழிக்கப்பட்டதாகவும் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை. அதனால் தான் நான் இதை செய்தியாளர் சந்திப்பைக் கூட்டி தெரிவிக்கவில்லை. காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகக் கூட இவ்வாறு கூறப்பட்டிருக்கலாம். அரசும், அதிகாரிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று தான் அவர் கூறியிருக்கிறார்.

பொதுநலனுக்காகவே சொன்னார்

இயக்குனர் மோகன் கூறியதில் எந்த தவறும் இல்லை. பொது நலன் கருதி கூறியதை முழுமையாக புரிந்து கொள்ளாமல், அங்கொன்றும், இங்கொன்றுமாக வார்த்தைகளை புரிந்து கொண்டு மோகனை கைது செய்திருப்பது அநீதி. அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என காட்டமாக கூறியிருக்கிறார்.

இது சட்டத்திற்கு புறம்பானது

முன்னதாக, பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் காட்டமான கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து அவர்களது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்போர் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது என்றார்.

மேலும், சினிமா இயக்குநர் நண்பர் திரௌபதி மோகன் ஜி சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை எனவும் கூறியிருந்தார்.

Whats_app_banner