Tamil News  /  Entertainment  /  Director Mohan G Confirms His Third Union With Actor Richard Rishi
மோகன் ஜி
மோகன் ஜி

Mohan G: ‘வேற மாதிரி ஒரு ஆட்டம்’ - அடுத்தப்பட ஹீரோவை அறிவித்த மோகன் ஜி!

18 March 2023, 11:59 ISTKalyani Pandiyan S
18 March 2023, 11:59 IST

தன்னுடைய அடுத்தப்படத்தின் கதாநாயகனை இயக்குநர் மோகன் ஜி அறிவித்து இருக்கிறார்

 

ட்ரெண்டிங் செய்திகள்

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குநர் மோகன் ஜி; அடுத்ததாக இவர் இயக்கிய திரைப்படம் திரெளபதி. இதில் அஜித்தின் மனைவியும் நடிகையுமான ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகானாக நடித்தார்.

போலித்திருமணம், நாடகக் காதல் ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதனைத்தொடர்ந்து மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படமும் விவாதத்தை எழுப்பியது. இதிலும் ரிச்சர்ட் ரிஷியே கதாநாயகனாக நடித்தார்.

படங்கள் மட்டுமல்ல இவர் ஜாதி குறித்து பேசும் பேட்டிகளும் சமூக வலைதளங்களின் வைரல் ரகம்தாம். இதனால் மோகன் ஜிக்கு ஜாதி வெறியன் என்ற முத்திரையையும் சிலர் குத்தினர். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்த படமானது மொபைல் போனால் இளைஞர்கள் எவ்வாறு பாலியல் தொழிலுக்குள் நுழைக்கப்படுகிறார்கள் என்பதை மையக்கருவாக கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. அதில் பல காட்சிகள் உண்மையை தத்ரூபமாக காண்பித்தாலும், மோகன் ஜி பெண்களை மிகவும் பிற்போக்குத்தனமாக காண்பித்துள்ளதாக கூறி சர்ச்சைகள் கிளம்பின.

தொடர்ந்து இயக்குநர் அமீர் நேர்காணல் ஒன்றில் மோகன் ஜியை பெயர் குறிப்பிடாமல், அவர் பின்னால் பாரதிய ஜனதா கட்சி இருக்கிறது என்று சொல்ல, அதற்கு பதிலளித்த மோகன் ஜி தான் அப்படியில்லை என்றும் அமீர் சொன்னதை 3 நாட்களுக்குள் வாபஸ் வாங்க வேண்டும் என்று பேட்டியளித்தார்.

தொடர்ந்து பகாசூரன் உண்மை கதை என்று கூறி வீடியோ ஒன்றையும் அவர் பகிர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் மோகன் ஜி தன்னுடைய அடுத்தப்படத்தின் அப்டேட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் , “ இந்த தடவை வேற மாதிரி ஒரு களம், வேற மாதிரி ஒரு ஆட்டம் பதிவிட்டு, அதில் ரிச்சர்ட் ரிஷியே தன்னுடைய அடுத்தப்படத்தின் கதாநாயகன் என்று சொல்லியிருக்கிறார்.

டாபிக்ஸ்