Hari Hara Veera Mallu: முகலாயப் பேரரசை எதிர்க்கும் போர்வீரனாக பவன் கல்யாண்.. பாகுபலி சாயலில் ஓர் படம்
Hari Hara Veera Mallu: பவன் கல்யாணின் நடிப்பில் உருவான ஹரிஹர வீரமல்லு படத்தின் டீஸரை தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ளனர்.

Hari Hara Veera Mallu: பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஹரி ஹர வீர மல்லு என்னும் வரலாற்றுப் படத்தின் டீஸர் இன்று வெளியாகியுள்ளது. படம் ஒரு கொடூர மன்னனைப் பற்றியும், அவரை எதிர்த்துப் போரிடும் வீரனைப் பற்றியுமான கதை எனக் கூறப்படுகிறது. இப்படத்தை தமிழின் முக்கியத் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ளார்.
தெலுங்கில் மாஸ் என்டர்டெய்னர்களுக்கு பெயர்போன ஹீரோ பவன் கல்யாண் மீண்டும் அதிரடியான படத்துடன் வந்துள்ளார். பவன் கல்யாண், இப்போது முகலாய சாம்ராஜ்யத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு பீரியட் ஆக்ஷன்-த்ரில்லரில் போர்வீரராக நடித்துள்ளார்.
இந்த படம் இப்போது இரண்டு பாகங்களாக வெளியிடப்படுவது மட்டுமல்லாமல், முதல் பாகத்திற்கு ஹரி ஹர வீர மல்லு பகுதி 1: வாள் vs ஸ்பிரிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக கடந்துவந்த பாதையைக் காண்போம்.