Cough : இருமலால் அவதியா? அதற்கு காரணம் கோவிட்டா? டிபியா? ஃப்ளூவா? சளியா? எப்படி தெரிந்துகொள்வது? இதோ வழிகள்!
Cough : உங்களுக்கு இருமல் ஏற்பட்டால் அது எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தொடர் இருமல் இருந்தால் அது எதனால் ஏற்படுகிறது என்று தெரிந்துகொள்வது மிகவும் கடினமான ஒன்றுதான். சுவாசம் தொடர்பான அத்தனை நோய்களுக்கும் ஒரு அறிகுறிகள்தான். எனவே உங்களுக்கு ஏற்பட்டுள்ளது கோவிட்டா? இன்ஃப்ளூயன்சாவா? வழக்கமான சளியா? அல்லது டிபியா என்றால், அனைத்துக்கும் இருமல்தான் வரும்.
ஆனால் குறிப்பிட்ட சில மாறுதல்களை நாம் காண முடியும். எனினும் மருத்துவர்களை நாடி, இந்த பிரச்னைகள் எதனால் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். சிலநேரங்களில் அறிகுறிகள் ஒன்றுபோல் இருக்கும். பரிசோதனைகள் தேவைப்படும்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் இருமல் எப்படி இருக்கும்?
தொடர், வறட்டு இருமல் இருக்கும். மற்ற சுவாசப்பிரச்னைகளைவிட குறைவான அளவு சளியே வரும். கோவிட்டுடன் தொடர்புடையதாக இருந்தால், எரிச்சல் அதிகமாகும். அது தொண்டை மற்றும் நெஞ்சில் அசௌகர்யத்தை ஏற்படுத்தும். மற்ற அறிகுறிகளும் தோன்றும்.
காய்ச்சல் மிதமானது முதல் கடுமையான காய்ச்சல் வரை ஏற்படும். மூச்சுவிடுவதில் சிரமம், மூச்சுதிணறல், மிதமானது முதல் கடுமையாக இருக்கும். கடும் உடல் சோர்வு ஏற்படும். கூடுதலாக சுவையிழப்பு ஏற்படும். வாசத்தை முகரமுடியாமல் போவது ஏற்படலாம். இந்த அறிகுறிகள் 2 முதல் 14 நாட்கள் ஏற்படும்.
ஃப்ளூ இருமல் எப்படியிருக்கும்?
வறட்டு இருமல் ஏற்படும். திடீரென கடுமையாக இருக்கும். இருமல், ஃப்ளூவுடன் தொடர்புடையது சளிக்கு காரணமாக இருக்கும். இருமலுடன் காய்ச்சல் மற்றும் உடல் வலி ஆகியவை ஃப்ளூவின்போது ஏற்படும். காய்ச்சல் ஃப்ளூவின் பொதுவான அறிகுறி. குளிருடன் வரும். கடும் உடல் வலி மற்றும் தசை வலி ஏற்படும். தலைவலி பொதுவான அறிகுறி. ஃப்ளுவின் அறிகுறி சில நாட்களிலே திடீரென உயரும்.
பொதுவான சளியின்போது இருமல் எப்படியிருக்கும்?
குறைவானது முதல் மிதமான இருமல் இருக்கும். இந்த இருமல் தெளிவான மற்றும் மஞ்சள் நிற சளியை உருவாக்கும். மூக்கடைப்பு அல்லது மூக்கு ஒழுகுதல், இருமல், அடிக்கடி தும்மல், தொண்டை கரகரப்பு மற்றும் சோர்வு இருக்கும். சோர்வு சற்று குறைவாகத்தான் இருக்கும். படிப்படியாக சில நாட்களில் சளி அதிகரிக்கும்.
டிபி வந்தால் எப்படி இருக்கும்?
3 வாரங்களுக்கு மேல் தொடர் இருமல் இருக்கும். இருமும்போது ரத்தம் வருவது டிபியின் அறிகுறிகள். இருமலுடன் கூடவே உடல் எடையிழப்பு ஏற்படும். கடும் சோர்வு மற்றும் பலகீன உணர்வு, இரவில் வியர்த்தல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். குறைவான காய்ச்சல், அவ்வப்போது காய்ச்சல் ஏற்படும். நெஞ்சில் அசௌகர்ய உணர்வு உண்டாகும். வாரங்களில் அதிகரித்து மாதக்கணக்கில் இருக்கும்.
தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை
இருமலின் காரணம் எதுவாக இருந்தாலும் பொதுவான முன்னெச்சரிக்கையாக, நல்ல சுகாதாரம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியம்.
கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவவேண்டும்.
இருமும்போது கைகளால் வாயை மூடிக்கொள்ள வேண்டும்.
சமூக இடைவெளி அவசியம். குறிப்பாக நோய்வாய்ப்பட்டவர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். கூட்டத்தில் செல்லும்போது கவனம் தேவை.
தேவையான தடுப்பூசிகளை போட்டுக்கொள்வது அவசியம்.

டாபிக்ஸ்