தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pathu Thala Second Song Release Date Announced

Pathu Thala: நினைவிருக்கா.. நாளை வருகிறது பத்து தல இரண்டாவது பாடல்

Aarthi V HT Tamil
Mar 12, 2023 11:30 AM IST

பத்து தல படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

பத்து தல இரண்டாவது பாடல்
பத்து தல இரண்டாவது பாடல்

ட்ரெண்டிங் செய்திகள்

 நம்ம சத்தம் எனத் தொடங்கும் அந்தப் பாடலை ஏஆர் ரஹ்மான் பாடியிருந்தார். சிம்புவுக்கு மாஸ் காட்டும் விதமாக நம்ம சத்தம் பாடல் உருவாகியிருந்தது. 

அதனைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் அப்டேட் வெளியாகியுள்ளது. கபிலன் வரிகளில் நினைவிருக்கா எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஏஆர் அமீன் பாடியுள்ளார். இந்தப் பாடல் வரும் 13 ஆம் தேதி ( நாளை ) மாலை 6 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல வருடங்களுக்கு முன்னர் பிரிந்து சென்ற காதலனும், காதலியும் மீண்டும் சந்திக்கும் சூழலை பின்னணியாகக் கொண்டு இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இப்பாடலை கேட்க சிம்பு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்குகிறார். இந்த படம் கன்னடத்தில் நரதன் இயக்கத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்காகும். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படம் கடந்த டிசம்பர் 14 அன்று வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தெரிவித்து இருந்தனர். ஆனால் சில காரணங்களால் படம், மார்ச் மாதம் 30 ஆம் தேதிக்கு தள்ளிப் போனது.

நடிகர் சிம்பு கடைசியாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் ஹீரோவாகவும் நடித்து இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு கெளதம் கூட்டணியில் அவர் நடித்திருந் இந்த பாடம் மாபெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்