Serial Actor Chetan:மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்-actor chetan journey as serial actor to dubbing artist in cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serial Actor Chetan:மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்

Serial Actor Chetan:மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 03, 2024 01:40 PM IST

Serial Actor Chetan: தமிழ் ரசிகர்கள் கட்டிப்போட்டி த்ரில்லர் டிவி தொடரான மர்மதேசம் நாயகன், குடும்ப சீரியலாக அமைந்த மெட்டி ஒலி தொடரில் மாணிக்கம் என்ற கேரக்டரில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்து, தற்போது தமிழ் சினிமாவில் பல வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன் கலை பயணத்தை பார்க்கலாம்.

Serial Actor Chetan: மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்
Serial Actor Chetan: மர்மதேசம் நாயகன்..மெட்டி ஒலி மாணிக்கம் டூ கொடூர போலீஸ் - வில்லன்கள் குரலாக ஒலிக்கும் நடிகர் சேத்தன்

தமிழுக்கு வந்த கன்னடர்

கர்நாடகாவின் பெங்களுருவை சேர்ந்தவரான நடிகர் சேத்தன் அங்குதான் தனது பள்ளி, கல்லூரி படிப்பை முடித்துள்ளார். ரஜினி, கமல் பார்த்து நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்ட சேத்தன், டிடி தொலைக்காட்சியில் உதவியாளராக பணியாற்றியுள்ளார்.

டிடியில் ஒளிபரப்பான ராமாயணம் தான் சேத்தன் நடித்த முதல் சீரியல் என்பது பலருக்கும் தெரியாது. நண்பரின் தூண்டுதலால் தான் இவர் சென்னைக்கு வந்துள்ளார். இவர் நடித்த சீரியலும் பாதியில் நின்று போயுள்ளது.

திருப்புமுனை தந்த மர்மதேசம்

சென்னைக்கு வரும்போது நண்பரிடம் சவால் விட்டு வந்த இவர், நடித்த வந்த சீரியலும் நின்று, வாய்ப்பு இல்லாமல் தவித்துள்ளார். அப்போது இவர் பணியாற்றிய புரொடக்சனில் இருந்தவர்கள் உதவ மர்மதேசம் தொடரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

முறுக்கு மீசையுடன் மர்மதேசம் சீரியலில் அமைதியும், ஆர்ப்பாட்டமும் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த தொடர் சேத்தனுக்கு வாழ்க்கை தந்ததோடு மட்டுமல்லாமல் புதிய பயணத்தையும் கொடுத்தது.

இதில் சேத்தனுடன் இணைந்து நடித்த தேவதர்ஷனியும் புதிய நடிகையாக பிரபலமடைந்தார். அப்போது மர்மதேசம் விடாது கருப்பு சீரிஸில் சேத்தன் - தேவதர்ஷினி இணைந்து நடித்தபோது இருவரின் கெமிஸ்ட்ரியும் வெகுவாக பேசப்பட்டது.

ரசிகர்கள், செட்டில் இருப்பவர்கள் கூட இருவரின் ஜோடி பற்றி பேசி பேசி காதல் பற்றிக்கொண்டது. பின்னர் சேத்தன் - தேவதர்ஷினி ஆகியோர் ரியல் ஜோடி ஆனார்கள். திருமணத்துக்கு பின்னரும் இருவரும் சீரியல்களில் தங்களது பயணத்தை மேற்கொண்டனர்.

மெட்டி ஒலி மாணிக்கம்

சின்னத்திரை ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்ட மெட்டி ஒலி சீரியலில் கதையின் நாயகனாக தோன்றியிருப்பார் சேத்தன். இந்த சீரியலில் மாணிக்கம் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களின் மனதை கவர்ந்திருப்பார். பாசமான மகன், கண்டிப்பான குடும்ப தலைவன் என சேத்தனின் கதாபாத்திரம் பேசப்பட்டது.

தமிழில் சூப்பர் ஹிட்டான சீரியல்களான குடும்பம், ரமணி vs ரமணி பகுதி 1, நம்பிக்கை, பஞ்சவர்னக்கிளி, மலர்கள், அத்திப்பூக்கள், ருத்ரவீணை, உதிரிப்பூக்கள் போன்ற 50க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

சீரியல்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாக்களிலும் சிறு சிறு குணச்சித்திரம், வில்லத்தனமான வேடங்களில் நடித்துள்ளார் சேத்தன்.

பொல்லாதவன், டிராபிக் ராமசாமி, படிக்காதவன், தமிழ்ப்படம் 2, கைதி, மாஸ்டர் உள்பட படங்களில் இவரது கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது.

கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான விடுதலை பார்ட் 1 படத்தில் கொடூரமான போலீஸ் அதிகாரியாக தோன்றியிருப்பார்.

வில்லன்களின் குரலாக ஒலிக்கும் சேத்தன்

நடிப்பு ஒரு பக்கம் இருக்க, டப்பிங் கலைஞராகவும் தமிழ் சினிமாவில் பல முக்கிய நடிகர்களின் குரலாகவும் ஒலித்து வருகிறார் சேத்தன்.

மருதமலை படத்தில் லால், படிக்காதவன் படத்தில் சுமன், அஞ்சான் படத்தில் மனோஜ் பாஜ்பாய், புஷ்பா படத்தில் சுனில் என இவரது குரலில் ஏராளமான நடிகர்கள் ஒலித்து கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜாவில் வில்லன் அனுராக் காஷ்யப்புக்கு இவர்தான் டப்பிங் குரல் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கலைஞனாக இருந்து வரும் சேத்தன் நடிப்பு, டப்பிங் என ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவராக இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.