தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ninaithale Inikum Serial: சதியால் உயிரிழக்கும் பொம்மி; எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும்!

Ninaithale Inikum Serial: சதியால் உயிரிழக்கும் பொம்மி; எதிர்பாராத திருப்பங்களுடன் நினைத்தாலே இனிக்கும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Apr 26, 2023 12:08 PM IST

பூஜையில் சாவித்ரி ஏற்பாடு செய்த ஆனந்த குட்டன் என்பவன் பொம்மியை கொல்ல வந்துள்ளான்.

நினைத்தாலே இனிக்கும்
நினைத்தாலே இனிக்கும்

ட்ரெண்டிங் செய்திகள்

நினைத்தாலே இனிக்கும் சீரியலில் கடந்த வாரம் பொம்மியின் உயிருக்கு ஆபத்து என்ற விஷயம் சித்தார்த்துக்கு தெரிய வந்த நிலையில் இந்த வாரம் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, சித்தார்த் பிள்ளையார் சிலையை திருடி வந்த நிலையில் அது காணாமல் போக அவனுக்குள் பயம் அதிகமாகி நம்பூதிரி ஒருவரை சந்திக்கிறான். அவர் கோவிலில் வைத்து யாகம் ஒன்றை நடத்த வேண்டும் என சொல்ல சித்து அதற்கான வேலைகளில் இறங்குகிறான்.

இதற்கிடையில் அவனுடைய பிறந்த நாள் வர பொம்மி எதிர்பாராத கிப்ட்டுகளை கொடுத்து சித்துவை மகிழ்ச்சியில் திக்குமுக்காட வைக்கிறாள். அடுத்து கோவிலில் அனைவரும் கூட நம்பூதிரி வந்து இறங்க யாகம் வேலைகள் தொடங்குகிறது.

இந்த பூஜையில் சாவித்ரி ஏற்பாடு செய்த ஆனந்த குட்டன் என்பவன் பொம்மியை கொல்ல வந்துள்ளான். மறுபக்கம் தமன்னா ஜூஸில் விஷத்தை கலந்து கொடுத்து பொம்மியை கொல்ல திட்டம் போடுகிறாள்.

இன்னொரு பக்கம் நேத்ரா தன்னுடைய ஆட்களுடன் வந்து பொம்மியை கடத்தி கொல்ல திட்டம் தீட்டுகிறாள். நம்பூதிரி இரவு 12 மணி வரை யாரும் எல்லையை விட்டு வெளியே போக கூடாது என கண்டிப்பாக சொல்ல இந்த யாக பூஜையில் பல தடங்கல் உருவாகிறது.

கடைசியில் பொம்மி வில்லிகளின் சூழ்ச்சியால் கொடூரமாக கொல்லப்படுகிறாள். இதற்கிடையில் நடந்த போராட்டங்கள் என்ன? இனி சித்தார்த் வாழ்க்கையில் நடக்கப்போவது என்ன என்ற பரபரப்பான திருப்பங்களுடன் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியான நிலையில் இனி இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தாலே இனிக்கும் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்