சீனாவில் தாறுமாறாக வசூலில் கல்லா கட்டி வரும் மகாராஜா.. இதுவரை எவ்வளவு வசூல் செய்தது தெரியுமா?
மகாராஜா படம் சீனா மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் நல்லாவே கல்லா கட்டி வருகின்றது. சீனாவில் மக்கள் தந்த வரவேற்பினால் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாச்சனா, அனுராக் காஷ்யப், அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மகாராஜா'. சென்னையில் முடிதிருத்தும் தொழிலாளியான மகாராஜா காவல் நிலையத்திற்குச் சென்று அவருடைய வீட்டில் இருந்து திருடப்பட்ட லட்சுமி எனும் குப்பைத் தொட்டியை கண்டுபிடித்து தருமாறு புகார் அளிக்கிறார். பின், அவர் தேடி வந்தது குப்பை தொட்டியையா அல்லது வேறு யாரையாவதா என்பதை படம் விறுவிறுப்பாக காட்டியுள்ளது.
"மகாராஜா" ஜூன் 14ம் தேதி அன்று இந்தியத் திரையரங்குகளில் வெளியான போது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ரூ .100 கோடிக்கும் மேல் வசூலித்தது.
சீனாவில் மகாராஜா வசூல்
கிழக்கு லடாக்கில் இந்தியா- சீனா நாடுகளுக்கு இடையிலான உறவுகளை இயல்பாக்குவதற்கான கடந்த மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு சீனாவில் வெளியிடப்பட்ட முதல் இந்திய திரைப்படமா "மகாராஜா" உள்ளது. இப்படம் வெளியான நிலையில், முதல் நாளில் சுமார் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
படம் சீனா மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் நல்லாவே கல்லா கட்டி வருகின்றது. சீனாவில் மக்கள் தந்த வரவேற்பினால் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்த நிலையில் இப்படம் சீனாவில் 9 நாட்களில் ரூ.56.85 கோடி வசூலித்ததாக தெரிவிக்கின்றனர்.
மேலும் ஏற்கனவே உலகளவில் ரூ 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில் தற்போது சீனா வசூலையும் சேர்த்து ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவில், அதிக வசூல் குவித்த டாப் 10 இந்திய படங்களின் பட்டியலில் இடம் பெறும்.
சீனாவில் நாடு முழுவதும் சுமார் 86,000 திரையரங்குகள் உள்ளன. இந்த நாடு தான் உலகிலேயே மிக அதிக திரையரங்குகளை கொண்ட நாடு.
மகாராஜா படத்தின் கதை
சலூன் கடை வைத்திருக்கும் தனது கதாநாயகன். மனைவியின் மரணத்திற்குப் பின்னர், தனது குழந்தையை தானே வளர்த்து ஆளாக்குகின்றார். இவரது மகளை சிலர் பாலியல் வன்கொடுமை செய்து விடுகின்றார்கள். தனது மகளை யார் இவ்வாறு செய்தது என்பதைக் கண்டுபிடிக்க அப்பா எடுக்கும் முயற்சி. மேலும் குற்றவாளியைக் கண்டுபிடித்த பின்னர் என்ன ஆனது என்பதுதான் க்ளைமேக்ஸ்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்