கண்டுகொள்ளப்படாத இளையராஜா பயோபிக்.. படம் ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை தான் என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கண்டுகொள்ளப்படாத இளையராஜா பயோபிக்.. படம் ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை தான் என்ன?

கண்டுகொள்ளப்படாத இளையராஜா பயோபிக்.. படம் ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை தான் என்ன?

Malavica Natarajan HT Tamil
Dec 11, 2024 02:35 PM IST

இளையராஜா பயோபிக் திரைப்படம் கருத்து வேறுபாடு காரணமாக ட்ராப் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்டுகொள்ளப் படாத இளையராஜா பயோபிக்.. படம் ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை தான் என்ன?
கண்டுகொள்ளப் படாத இளையராஜா பயோபிக்.. படம் ட்ராப்பா? தீயாய் பரவும் தகவல்.. உண்மை தான் என்ன?

1000 படங்களுக்கு மேல் பாடல்களை இசையமைத்து கொடுத்தவர். இசையமைப்பது மட்டுமல்லாமல் தன் காந்தர்வக் குரலால் பலர் மனங்களை மயக்கியவர், பாடல்களை எழுதியவர். தன் பாடல்களுக்கு தானே நோட்ஸ் எழுதும் ஒரே இந்திய இசையமைப்பாளர் என பல திறமைகள் இவருக்கு உள்ளது.

மந்திரக்காரர் இளையராஜா

இவர் நோபல் பரிசைப் பெறவில்லை என்றாலும், மக்களின் மனம் எனும் பரிசை நித்தம் நித்தம் பெற்று வருகிறார். சமீப கலாமாக இளையராஜாவைப் பற்றிய எதிர்மறைக் கருத்துகள் பல வெளியாகி வருகிறது. ஆனால், பலரும் அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மைகளை வெளியே தைரியத்துடன் சொல்லவும் மறுக்கிறார்கள்.

தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைபுரம் எனும் கிராமத்தில் இருந்து வந்த இவர், தமிழ் சினிமாவை தன் இசை என்னும் மந்திரத்திற்குள்ளே கட்டி வைத்துள்ளார். இதனால், இவரை வரும் தலைமுறையினரும் கொண்டாடி வருகின்றனர்.

இளையராஜா பயோபிக்

இந்நிலையில் தான், இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க சிலர் கூட்டு முயற்சிகளை எடுத்தனர். அந்த முயற்சியின் விளைவாக, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கமல்ஹாசன் திரைக்கதையில், தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் படத்திற்கான இசைகளை இளையராஜாவின் பல படங்களில் பயன்படுத்திய இசைகளில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கனெக்ட் மீடியா, பிகே புரொடக்‌ஷன்ஸ், மெர்குரி மூவீஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இளையராஜாவும் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்தது.

போஸ்டர் வெளியீடு

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் அருகே இளையராஜா ஹார்மோனியப் பெட்டியுடன் நிற்பது போன்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இது இளையராஜா ரசிகர்களை பெரிதும் குஷிப்படுத்திய நிலையில், படம் எப்போது எடுக்கப்படும், அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என்ற ஆவலில் காத்திருந்தனர்.

தொடரும் நெகட்டிவ் அறிவிப்புகள்

ஆனால் வந்ததோ வேறு மாதிரியான பதில்கள். படத்தின் திரைக்கதை பொறுப்பில் இருந்து கமல் ஹாசன் விலகிவிட்டார். பட்ஜெட் அதிகரிப்பு காரணமாக தயாரிப்பு நிறுவனம் விலகிவிட்டது.

நடிகர் தனுஷ் குபேரா படத்தை முடித்துவிட்டு இளையராஜா பயோபிக்கில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபற்றிய எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆவது, படங்களை இயக்குவது ரசிகர்களிடம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

படம் ட்ராப் ஆனதா?

இந்த நிலையில், படக்குழுவினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளையராஜா பயோபிக் திரைப்படம் ட்ராப் ஆகி உள்ளது, தனுஷ் படத்தில் நடிக்க மறுக்கிறார், இயக்குநருடன் பிரச்சனை, இளையராஜாவுடன் பிரச்சனை என பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. படக்குழு தரப்பில் இருந்து தற்போது வரை எந்தவொரு தகவலையும் தெளிவாக அறிவிக்காததால் அனைவரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.