அடுத்த ஆண்டில் புதிய பார்ட்னர்.. காதலில் விழுந்த சமந்தா? இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் குஷி
Samantha Instagram: அடுத்த ஆண்டில் நேர்மையான, அன்பான பார்ட்னர் அமையும் என்கிற ஜோதிட கணிப்பை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் சமந்தா. பாலிவுட் நடிகருடன் அவர் காதலில் விழுந்திருப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.
Samantha Instagram: தென்னிந்திய சினிமாக்களில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, கடந்த மாதம் வெளியான சிட்டாடல்: ஹனி பன்னி வெப்சீரிஸ் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளார். தற்போது கைவசம் இரண்டு பாலிவுட் படங்களை வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், சமந்தா மும்பையில் தற்காலிகமாக செட்டிலாகும் முடிவில் உள்ளாராம்.
சமந்தாவுக்கு புதிய பார்ட்னர்
சமந்தா தனது இன்ஸ்டா ஸ்டோரில் பகிர்ந்த பதிவில் வரும் 2025ஆம் ஆண்டுக்கான ராசிபலன் இடம்பிடித்திருந்தது. இதில், தனது ராசிக்கான ஜோதிட கணிப்பை பகிர்திருந்த அவர் ஆமென் என குறிப்பிட்டிருந்தார். அவருக்கான ஜோதிட கணிப்பில் மிகவும் நேர்மையான மற்றும் அன்பை வெளிப்படுத்தும் துணை அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது ரசிகர்களின் புருவத்தை உயரச்செய்துள்ளது.
சமந்தா தனது பதிவில், "2025 ஆம் ஆண்டிற்கான ரிஷபம், கன்னி, மகரம் கணிப்புகள் பின்வருமாறு. நீங்கள் மிகவும் பிஸியாக இருப்பீர்கள். உங்கள் கலையில் முன்னேற்றம் காண்பீர்கள். இதன் மூலம் அதிக பணம் சம்பாதிப்பீர்கள்.
நிதி நிலைத்தன்மையையும் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் நேர்மையான மற்றும் அன்பான துணையைப் பெறுவீர்கள். பல ஆண்டுகளாக நீங்கள் வைத்திருந்த பெரிய இலக்குகள் நிறைவேறும். பல்வேறு வழிகளில் வருமானம் வரும். வேறு இடத்துக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும்"
இதையடுத்து அன்பு குறித்து மற்றொரு பதிவை பகிர்ந்திருக்கும் சமந்தா, தனது வளர்ப்பு நாயான சாஷா புகைப்படத்தை பகிர்ந்து, "சாஷாவின் காதலுக்கு இணையான காதல் வேறு இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
சமந்தாவின் இந்த பதிவுக்கு பலரும் லைக்குகளை குவித்ததோடு, மீண்டும் புதிய பார்ட்னருடன் அவரை பார்க்க ஆர்வமாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.
காதலில் விழுந்த சமந்தா
இந்த சூழ்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர், சமந்தா இடையே காதல் பூத்திருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் உலா வருகின்றன. அதன்படி, மும்பைக்கு செல்லும்போதெல்லாம் நடிகர் அர்ஜுன் கபூர் வீட்டில் தான் தங்கி வருகிறாராம்.
படப்பிடிப்பில் பங்கேற்றால் அர்ஜுன் கபூர் வீட்டில் இருந்து தான் சமந்தாவுக்கு சாப்பாடு வருகிறது. தன்னை விட வயது மூத்த நடிகையான மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொண்ட அர்ஜுன் கபூர் சமீபத்தில் அவரை பிரிந்தார்.
இதையடுத்து தங்களது ஜோடிகளை பிரிந்த அர்ஜுன் கபூர், சமந்தா ஆகியோருக்கு இடையே நட்பு உருவாகி, தற்போது நெருக்க ஏற்பட்டுள்ளது. சமந்தா, அர்ஜுன் ஆகியோர் காதலில் இருப்பதாக பாலிவுட் ஊடகங்கள் தகவல்கள் பரப்பி வரும் நிலையில், இதற்கு எந்த மறுப்பும் இருவரும் தெரிவிக்காமல் உள்ளனர்.
நாகசைதன்யா திருமணம் குறித்து இன்ஸ்டா பதிவு
முன்னாள் காதல் கணவரான நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்றது. நாக சைதன்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில், சமந்தாவின் ரியாக்ஷன் என்னவாக இருக்கிறது என்பது பலரும் எதிர்பார்த்திருந்தனர்.
அப்போது சிறுவன், சிறுமி ஆகியோர் குத்துசண்டை போடும் விடியோவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் சமந்தா. அதில் சிறுமை தாக்கும் சிறுவனை எதிர்கொள்ளும் சிறும் இறுதியில் அவனை புரட்டி போடுகிறாள். சிறுமி போல் சண்டையிட கற்றுக்கொள்ளுங்கள் என குறிப்பிட்டிருந்தார். திருமண வாழ்க்கையில் இருந்த மீண்டு வந்ததை வெளிப்படுத்தும் விதமாக அவர் இந்த விடியோவை பகிர்ந்திருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்துகளை பகிர்ந்தனர்.
சமந்தா புதிய படங்கள்
சமந்தா நடிப்பில் கடைசியாக கடந்த 2022இல் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இதையடுத்து தற்போது பங்காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்து வரும் சமந்தா, ரக்த் பிரமாண்த்: தி பிளட்டி கிங்டம் என்ற இந்தி டிவி சீரிஸில் நடித்து வருகிறார். இதுதவிர பாலிவுட் படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.