Sasikumar: முகத்தில் மிதித்து... முதுகை கிழித்து... கழிவறையில் தள்ளி... கொடுமைக்கு மன்னிப்பு கேட்ட இயக்குநர்
Sasikumar: நடிகரும் இயக்குநருமான சசிக்குமார் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், நந்தன் திரைப்பட இயக்குநர் இரா.சரவணன், சசிகுமாரிடம் ஒரு நீண்ட நெடிய மன்னிப்பைக் கோரியுள்ளார். அதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தமிழ்நாட்டில் பலரும் படித்து முன்னேறி சமூக பாகுபாடுகளை கடந்து வருகின்றனர். ஆனால், ஒருபுறம் எத்தனை நாகரிக மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இன்னமும் சிந்தனையிலும் ரத்தத்திலும் சாதிய பாகுபாடுகள் ஊறிப்போய் உள்ளனர். அவர்கள் அனைத்து மனிதர்களையும் சமமாக பார்க்க பழகுவதே இல்லை. அத்துடன் வரும் தலைமுறையினரையும் பழக விடுவதில்லை. இந்தக் கருத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் நந்தன்.
இந்நிலையில், இந்தப் படத்தின் இயக்குநரான இரா.சரவணன், நந்தன் திரைப்படத்தில் நாயகனாக நடித்துள்ள சசிக்குமாரிடம் மன்னிப்பு கோரி நீண்ட நெடிய பதிவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தில் உள்ள காட்சிகள் உண்மையாகவும், தத்ரூபமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சசிகுமாரை பல கொடுமைகள் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தனது 50வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், இயக்குநரின் இந்தப் பதிவு பதைபதைக்க வைக்கிறது.