Nandhan: இந்தப் படத்துக்கு நான் ஹீரோ இல்ல... ஆளையே மாத்தி இப்படி ஆக்கிட்டாங்க... உண்மைய சொன்ன சசிகுமார்...
Nandhan: மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவரும் நந்தன் திரைப்படம் தனக்காக எழுதப்பட்ட கதையோ அல்ல. என்னை வம்படியாக பிடித்து இந்த படத்தில் நடிக்க வைத்தனர் என தனக்கு நடந்த உண்மைக் கதையை விவரமாக கூறியுள்ளார்.

இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படத்திற்கு அனைத்து இடங்களிலிருந்தும் பாஸிட்டிவ்வான விமர்சனங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தப் படம் குறித்து நடிகர் சசிகுமார் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், நந்தன் படத்திற்கான கதை தனக்காக எழுதப்பட்டது அல்ல. அது நடிகர் சூரிக்காக எழுதப்பட்டது. ரயிலுக்கு வழியனுப்ப போன என்னை ஹீரோவாக்கிட்டாங்க எனக் கூறியிருப்பார். நந்தன் திரைப்படம் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து தற்போது இவரது பேச்சு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இரா.சரவணனன் இயக்கத்தில் சசிகுமாரின் நடிப்பில் பட்டியலின மக்களின் மீதான ஆதிக்க வர்க்கத்தின் அடக்குமுறை குறித்து நந்தன் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் படத்தை பாராட்டி வந்தனர். மேலும், இந்தப் படத்தை பார்த்த பட்டியலின ஊராட்சி மன்றத் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடந்த துயர்களை இத்திரைப்படம் கூறுவதாகவும், பல காட்சிகள் வாழ்க்கையில் நடந்த கோர நிகழ்வுகளின் வலியை நினைவூட்டி வருவதாகவும் கூறியிருந்தனர்.