Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்-music director rizwan wins best director award in clef music awards for kaladeeram song in jameela serial - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்

Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Oct 02, 2024 08:30 AM IST

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜமீலா தொடரில் இடம்பிடித்த ’காலதீரம்’ பாடலுக்காக இந்த ஆண்டின் சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை பெற்றுள்ளார் இசையமைப்பாளர் ரிஸ்வான். இஸ்லாமிய பின்னணியில் ஒளிபரப்பான தமிழ் சீரியல் ஆக அமைந்த இந்த தொடர ஒளிபரப்பாகி முடிந்து ஓராண்டு ஆகியுள்ளது.

Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்
Music Director Rizwan: இஸ்லாமிய பின்னணியில் தமிழ் சீரியல்..சிறந்த தமிழ் இசையமைப்பாளர் விருதை வென்ற ரிஸ்வான்

இஸ்லாமிய பின்னணியில் டிவி தொடர்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், ராடன் நிறுவனம் தயாரிப்பில் ஒளிபரப்பான தொடர் ”ஜமீலா”. தென் இந்திய தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் முதன் முறையாக இஸ்லாமிய பின்னணியில் உருவாக்கப்பட்ட தொடர் இது.

தன்வி ராவ் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். தனக்குள் இருக்கும் பாடும் திறமையை குடும்பச்சூழலால் வெளிப்படுத்தாமல் இருக்கும் நாயகி எப்படி உலகம் கொண்டாடும் பாடகியாகிறார் என்ற கருவின் அடிப்படையில் அமைந்தது இந்த தொடர்.

”திருமணம் என்னும் நிக்கா” திரைப்பட புகழ் இயக்குநர் அனீஸ், இயக்குர் ஆஸிப் குரைஷி ஆகியோர் இத்தொடரை இயக்கியிருந்தார்கள்.

இசைக்கு முக்கியத்துவம் தந்த தொடர்

இசைக்கும், பாடலுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரில் மூன்று பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தையுமே இசையமைப்பாளர் ரிஸ்வான் இசையமைத்திருந்தார். இதற்கான பாடல் வரிகளைப் பாடலாசிரியர் அஸ்மின் எழுதியிருந்தார்.

மலையாளப் பாடகி ’ஜெர்ரில் சாஜி ’தமிழில் முதன்முதலாக அனைத்தும் பாடலையும் மிகவும் அழகா பாடியிருந்தார். இப்பாடல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்ப்பைப் பெற்றிருந்தன.

இத்தொடரில் பிரபல நடிகர்கள் கெளதம் சுந்தர்ராஜன், பூவிலங்கு மோகன் நண்பர்களாக நடித்துள்ளார்கள். நீண்ட இடைவேளைக்கு பிறகு ஐஸ்வர்யா பாஸ்கரன் சின்னத்திரைக்கு இந்த தொடர் மூலம் களம் இறங்கினார். கதாநாயகனாக நடித்திருந்த அஜய்க்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது.

சிறந்த இசையமைப்பாளருக்கான விருது

ராதிகா சரத்குமார் மிகவும் விரும்பி தயாரித்த இந்த தொடரில் ரிஸ்வானின் இசையில் இடம்பெற்ற மூன்று பாடல்களும் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்று அனைவரது மனதிலும் இடம் பிடித்திருந்தன. தற்போது காலதீரம் பாடலுக்காக இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது ரிஸ்வானுக்கு கிடைத்துள்ளது.

விருது பெற்ற இசையமைப்பாளர் ரிஸ்வானுக்கு ராடன் நிறுவனத்தின் மேலதிகாரி சுபாவெங்கட், கலர்ஸ் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி பிரிவு தலைமை அதிகாரி ஜெரால்ட், மூத்த மேலாண்மை தயாரிப்பாளர் ஹரி, இயக்குநர்கள் அனீஸ், பாடலாசிரியர் அஸ்மின், இயக்குநர் ஆசிப் குரேஷி ஆகியோர் வாழ்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்கள்.

ஜமீலா தொடர்

கடந்த 2022 அக்டோபரில் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான ஜமீலா தொடர், 2023இல் மொத்தம் 70 எபிசோடுகளுடன் முடிவடைந்தது. தற்போது இந்த தொடரை ஜியோ சினிமா, ஊட் ஆகிய ஸ்டிரீமிங் தளங்களில் இடம்பிடித்துள்ளது. இந்த சீரியல் ஒளிபரப்பான காலகட்டத்தில் பல்வேறு ரசிகர்களை வெகுவாக கவரந்திருந்தது.

கலர்ஸ் டிவி தொடர்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிகப் பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் ஆன்மிக புராண தொடராக சிவசக்தி திருவிளையாடல் ஒளிபரப்பாகி வருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்று கடந்த ஜூன் மாதம் முதல் இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.