Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!-radhika sarathkumar latest interview about malayalam sexual assault what are adjustment issues in tamil cinema - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!

Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 06:21 AM IST

Radhika: 60களில் இருந்தே இந்த மாதிரியான பழக்கங்கள் இருந்து வந்தது. இதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆரம்பக்காலகட்டத்தில் நான் மிகவும் அமைதியாக, அடக்க ஒடுக்கமாகவே இருந்தேன். - ராதிகா!

Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!
Radhika: என் ரூமிலேயே… சாப்பிடத்தான் போனேன்.. ராதிகா ஜல்சான்னு எழுதிட்டாங்க.. வீட்ல வைச்சு செஞ்சேன் - ராதிகா சரத்குமார்!

படுக்கைக்கு அழைப்பது இயல்பு

இது குறித்து அவர் பேசும் போது, “சினிமாவிற்கு வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது என்னவோ, இன்று நேற்று நடந்து வருவதில்லை. 60களில் இருந்தே இந்த மாதிரியான பழக்கங்கள் இருந்து வந்தது. இதை சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஆரம்பக்காலகட்டத்தில் நான் மிகவும் அமைதியாக, அடக்க ஒடுக்கமாகவே இருந்தேன்.

 

ராதிகா
ராதிகா (Radikaa Sarathkumar instagram )

ஆனால் காலப்போக்கில், திரைத்துறையில் மற்றவர்களுக்கு நிகழக்கூடிய அனுபவங்களை பார்த்த போது, என்னை நானே கடினமானவளாக மாற்றிக் கொண்டேன். அது எனக்கு ஒரு பாதுகாப்பு வளையமாக இருந்தது. இவ்வளவு ஏன் பல நடிகைகள் உங்கள் ரூமில் இருந்தால், எங்களை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என்று கூறி என்னுடன் வந்து தங்கி இருக்கிறார்கள். இதில் இன்னொரு கேள்வி எழுகிறது.

அநீதி நடக்கும்போதே..

அநீதி நடக்கும்போதே நீங்கள் இந்த விவகாரத்தை வெளியே சொல்லி இருக்கலாமே என்று கூறுகிறார்கள். உண்மையாகச் சொல்லுங்கள்…மலையாள உலகில் தற்போது பதிவு செய்யப்பட்டு இருக்கும் வழக்குகள், நீதிமன்றத்தில் எந்த புள்ளியில் சென்று முடியும் என்று.. சின்மயி வைரமுத்து மீது பாலியல் புகாரை தெரிவித்தார். அதனுடைய தற்போதைய நிலைமை என்ன?

இந்த விவகாரத்தில், நடிகர் விஷால் யார் வேண்டுமென்றாலும் யாரைப் பற்றியும், எப்படி வேண்டுமென்றாலும் பேசலாம் என்று கூறி இருக்கிறார். அது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்து. உங்களை ஒரு பெண் அப்படிச் சொல்லிவிட்டார். என்பதற்காக, நீங்கள் அப்படி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

ராதிகா
ராதிகா (Radikaa Sarathkumar instagram )

அவர் தனி நபராக அவரது கூறியிருந்தால் பரவாயில்லை. அவர் ஒரு பொறுப்பில் இருக்கிறார். அப்படி பொறுப்பில் இருக்கும் பொழுது, அவர் அப்படி சொல்வதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இன்றும் நிறைய பேர் அவர்கள் நடிகைகள்தானே.. எப்போது கூப்பிட்டாலும் படுக்கைக்கு வருவார்கள் என்ற ரீதியில் பேசுகிறார்கள். முன்பு, ஹோட்டலுக்கு நான் சாப்பிடச் சென்றாலே, இவர் அதற்காகத்தான் வந்திருக்கிறார் என்று பேசுவார்கள். பத்திரிகைகளில், ஹோட்டலில் ராதிகா ஜல்சா என்று எழுதுவார்கள்

என்னிடம் தவறாக அணுகிய ஒரு நபரை என் வீட்டில் வைத்து நான் செய் செய் என்று செய்தேன். காலத்திற்கு ஏற்றவாறு நாம் மாற வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். முன்வந்து தங்களுக்கு நடக்கும் அநீதிகளை சொல்ல வேண்டும். ” என்று பேசினார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.