தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Splitsvilla X5 Season 15: அட்டகாசமாக தொடங்கிய எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 - இதுவரை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Splitsvilla X5 Season 15: அட்டகாசமாக தொடங்கிய எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5 - இதுவரை என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 21, 2024 09:36 PM IST

இளம் ரசிகர்களை சுண்டி இழுக்கக்கூடிய சூடான ரியாலிட்டி ஷோவான ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டான எம்டிவியின் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் ரியாலிட்டி ஷோவின் 5வது சீசன் புதிதாக தொடங்கி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

ஸ்பிளிட்ஸ்வில்லா டேட்டிங் ஷோவில் சன்னி லியோன் - தனுஜ் விர்வானி
ஸ்பிளிட்ஸ்வில்லா டேட்டிங் ஷோவில் சன்னி லியோன் - தனுஜ் விர்வானி

ட்ரெண்டிங் செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தொலைக்காட்சி மற்றும் ஓடிடியில் ஒரே நேரத்தில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி ஏகப்பட்ட ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. ஓடிடி ரசிகர்கள் ஜியோ டிவியில் இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் நிகழ்ச்சியை இந்த முறை தமிழ் மொழியிலும் கண்டு ரசிக்க முடியும்.

எபிசோடு 1 முதல் 6 வரை ஒரு சின்ன ரீகேப்:

தினுசு தினுசாக கவர்ச்சி உடைகளை கலக்கலாக அணிந்து கொண்டு ரசிகர்களை சுண்டி இழுக்கக் கூடிய உர்ஃபி ஜாவேத் இந்த சீசனிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்த களமிறங்கி உள்ளார். மேலும், எக்ஸ் ஸ்ப்ளிட்ஸ்வில்லா போட்டியாளர்களுடன் அவர் அடிக்கப் போகும் லூட்டியை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறும்புக்காரியான உர்ஃபி ஜாவேத்தின் என்ட்ரியே இந்த சீசனில் அதிரடியாக இடம்பெற்றிருந்தது. தனது ஆரம்ப ஆட்டத்தையே தந்திரமாக விளையாடி இஷிதாவின் என்ட்ரியை கலகலப்பாக்கி விட்டார் உர்ஃபி ஜாவேத்.

தந்திரமான விளையாட்டின் மூலம் ஒவ்வொரு போட்டியாளர்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றனர். திக்விஜய் மற்றும் உனாட்டியின் தொடர்பு உள்ளிட்டவை பொறாமையை உருவாக்கி நிகழ்ச்சியின் டென்ஷனையும் இஷ்டத்துக்கு எகிற வைத்திருக்கிறது.

இந்த வில்லாவில் மலரும் புதிய காதல்களும், சிலருக்கு ஏற்படும் சங்கடங்களும், பொறாமை, கோபம் உள்ளிட்ட மனித உணர்ச்சிகள் கிளர்ந்து எழுந்து வரும் நிலையில், நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு அறுசுவையான உணவை பரிமாறும் உணர்வை கொடுக்கிறது. ஒருவருடன் ஒருவர் நெருங்கி பழகி காதலை வளர்ப்பது, பின்னர் பிரேக்கப் ஆகி பிரிவது, இன்னொருவருடன் உறவை வளர்ப்பது என ஏகப்பட்ட சுவாரஸ்யங்களுடன் இதுவரை இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா சீசன் 5 களைகட்டி வருகிறது.

த்ரில்லர் படம் போல பல திருப்பங்களுடன் ரோலர் கோஸ்டர் ரைடு போல இந்த ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ் 5: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் சென்றுக் கொண்டிருக்கிறது. காதல், பாசம், பிரிவு, மோதல் என மனிதர்களின் உறவுகள் மேம்பட்டு தெரியும் இந்த ரியாலிட்டி ஷோவை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு எம் டிவி மற்றும் ஜியோ டிவியில் பார்த்து மகிழுங்கள்.

ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 15

எம்டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல டேட்டிங் ஷோவாக ஸ்பிலிட்ஸ்வில்லா இருந்து வருகிறது. இந்த டேட்டிங் நிகழ்ச்சி முதல் முறையாக ஜியோ சினிமா செயலியில் தமிழிலும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மொத்தம் 31 போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளார்கள். அத்துடன் இந்த புதிய சீசனில் புதுமையான, மற்றும் சுவாரஸ்யமான சில விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்கும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் பல்வேறு போட்டிகள், எமோஷனல் தருணங்கள் போன்றவற்றை கடந்த தங்களுக்கு ஏற்ற சிறந்த ஜோடியை தேர்வு செய்வார்கள். இறுதியில் சிறந்த ஜோடியாக இருப்பவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்படுவார்கள்.

தற்போது இந்த சீசன் ஸ்ப்ளிட்ஸ்வில்லா எக்ஸ்: எக்ஸ்க்யூஸ் மீ ப்ளீஸ் என்ற பெயரில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்