Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை.. ஷாக் ஆகும் பிரபு.. திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள்
Marumagal: ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த நினைக்கும் ஆதிரை செயல்பாடால் ஷாக் ஆகும் பிரபு மற்றும் இவர்களின் திருமணத்தை நிறுத்த துடிக்கும் சொந்தங்கள் பற்றி இன்றைய மருமகள் எபிசோடு பேசுகிறது.

Marumagal: சன் டிவியில் ஒளிபரப்பாகும் மருமகள் சீரியலில், ஆகஸ்ட் 17ஆம் தேதிக்கான புரோமோ இன்றுவெளியாகியுள்ளது. இந்த மருமகள் சீரியல் மாலை 8 மணிக்கு, சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இன்றைய புரோமோ:
மருமகள் புரோமோவில் தில்லையின் மகள் ரோகிணி நிச்சயதார்த்தப் புடவையை விலை அதிகமாக வாங்கவேண்டும் என தன் தந்தையிடம் கூறுகிறார். மேலும், மருமகள் புரோமோவில், ஆதிரை பிரபுவிடம் போனில் பேசும்போது, செலவைப் பற்றி கவலைப்படாமல் ஆடம்பரமாக திருமணம் செய்யவேண்டும் என்கிறார். தவிர, அதைக்கேட்டதும் அய்யய்யோ எனக் கதறுகிறார், பிரபு. பிரபுவின் நிச்சயத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என அவரது உறவினர்கள் திட்டமிடுகின்றனர்.
முந்தைய எபிசோட்:
மருமகள் சீரியலில் தாய் அற்ற பிள்ளைகளை வளர்த்து வரும் சிவப்பிரகாசம், வாட்டர் கேன் பிசினஸ்செய்து வரும் நிலையில், தேவா என்னும் இன்னொரு வாட்டர் கேன் பிசினஸ் செய்துவருபவரிடம் இருந்துபோன் வருகிறது. அதில் சிவப்பிரகாசத்தின் வாகனம் தங்கள் வசம் இருப்பதாகச் சொல்கிறார், தேவா. இதைத்தொடர்ந்து தேவாவின் இடத்துக்குச்சென்று அதை மீட்கப்பேசும் சிவப்பிரகாசத்தைக் கத்தியை வைத்து குத்தப்பார்க்கிறார், தேவா.