Marumagal serial: ஆதிரை - பிரபு கல்யாணத்தில் சிக்கல்.. மணிமேகலையை வறுத்த பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial nadagam latest today august 6 2024 episode promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ஆதிரை - பிரபு கல்யாணத்தில் சிக்கல்.. மணிமேகலையை வறுத்த பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ஆதிரை - பிரபு கல்யாணத்தில் சிக்கல்.. மணிமேகலையை வறுத்த பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 06, 2024 09:06 AM IST

Marumagal serial: சிவப்பிரகாசம் சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்ள, அந்த இடத்திற்கு ஆதிரை வேகமாக வந்து கொண்டிருக்கிறார்.

Marumagal serial: ஆதிரை - பிரபு கல்யாணத்தில் சிக்கல்.. மணிமேகலையை வறுத்த பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: ஆதிரை - பிரபு கல்யாணத்தில் சிக்கல்.. மணிமேகலையை வறுத்த பிரபு! - மருமகள் சீரியலில் இன்று!

இதற்கிடையே தில்லை வீட்டில் பிரபுவிடம் இந்த விஷயம் குறித்துபேச சொல்லி வற்புறுத்தல் நடக்கிறது. ஆனால் தில்லையோ, சிவப்பிரகாசத்திடம் முழு சம்மதம் வாங்காமல் எப்படி பிரபுவிடம் இது குறித்து பேசுவது என்று கேட்கிறார். இதற்கிடையே சிவப்பிரகாசம் சிக்கல் ஒன்றில் மாட்டிக் கொள்ள, அந்த இடத்திற்கு ஆதிரை வேகமாக வந்து கொண்டிருக்கிறார். அதன் பின்னர் என்ன ஆனது என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம். 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

மனோகரி பத்திரத்தை எழுதி வாங்கிக்கொண்டு பின்னர் அடமானம் வைக்க தர மறுத்ததை சிவப்பிரகாசம் ஆதிரையிடம் சொல்லி, ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். மேலும், அவளைப் பற்றி உனக்கு தெரியவில்லை; உனக்கென்று இருந்த ஒரே ஒரு இடம் அதுதான். அதையும் அவள் வைத்துக் கொண்டு தற்போதுட் தர மறுக்கிறாளே.. எனக்கு வரும் ஆத்திரத்திற்கு அவளை இப்பொழுதே வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என்பது போல இருக்கிறது என்று கோபத்தில் சாடினார்.

அத்துடன், அவளுடைய பிள்ளைகளுக்காக உன்னுடைய சொத்தை எடுத்துக் கொள்கிறாளே என்று கூறியும் வருத்தப்படுகிறார். இதையடுத்து அவரை சமாதானப்படுத்தும் ஆதிரை, பரவாயில்லை அப்பா அம்மா தானே அதை எடுத்துக் கொள்ளட்டும். அவர்கள் தரப்பிலிருந்து அதை பார்க்கும் பொழுது அது சரியாகத்தானே இருக்கிறது என்று சொல்கிறாள். ஆதிரையின் வெள்ளந்தியான மனதை பார்த்து சிவப்பிரகாசம் கவலைப்படுகிறார்.

ஆதிரை சொன்ன பதில் என்ன?

தில்லை, சிவப்பிரகாசத்திடம் ஆதிரையை பெண் கேட்ட விஷயத்தை ஆதிரையிடம் சொல்ல அவளோ, நீங்கள் உண்மையில் எனக்கு கல்யாணம் செய்ய விருப்பப்படுகிறீர்களா? இல்லை அம்மா மீது இருக்கும் கோபத்தில்,எனக்கு கல்யாணம் செய்து வைக்கிறீர்களா என்று கேட்டாள். அதற்கு சிவப்பிரகாசம், ஆதிரை நீ கஷ்டப்படுவதை தெய்வமே விரும்பவில்லை. அதனால் தான் ஒரு கதவை மூடிய அவன், இன்னொரு கதவை திறந்து இருக்கிறான் என்று சொன்னார்.

இதையடுத்து ஆதரை தில்லை மாமா சொன்னதற்கு நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று கேட்க, அதற்கு நான் உன்னிடம் கேட்டு சொல்வதாக சொன்னேன் என்று சொன்னார். இதையடுத்து ஆதிரை உங்களுக்கு சூப்பர் மார்க்கெட் வைத்து கொடுத்து விட்டு தான் நான் கல்யாணம் செய்து கொள்வேன் என்று நிபந்தனை விதிக்கிறார். அதற்கு சிவப்பிரகாசமும் சம்மதிக்கிறார்.

சாடிய பிரபு

இதற்கிடையே தில்லை மணிமேகலையிடமும் குடும்பத்திடமும், ஆதிரையை பெண் கேட்டது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். எல்லோரும் ஆதிரையின் விருப்பத்தை மட்டுமே பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென்று இந்த கல்யாணத்தில் பிரபுவுக்கு விருப்பம் இருக்கிறதா என்று கேட்டீர்களா என்ற கேள்வி எழுந்தது இதையடுத்து அங்கு பிரபு வந்தான். அப்போது அங்கு மணிமேகலை இருப்பதை பார்த்து டென்ஷன் ஆனவன், நீங்கள் எதற்கு எங்களுடைய குடும்பத்தில் தலையிடுகிறீர்கள் என்று கேட்டான்.

அதற்கு மணிமேகலை நானும் உங்கள் குடும்பத்தில் ஒருத்தி தானே என்று சொல்ல, கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற அவன், மணிமேகலையை வெளியே செல்லுமாறு சாடினான். இதற்கிடையே மணிமேகலைக்கு கார்த்திக் ஆதரவாக பேச, அவனிடமும் சண்டைக்குச் சென்றான். இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்பிச் செல்ல, பிரபுவும் அங்கிருந்து கோபத்துடன் கிளம்பிச் சென்றான். இதையடுத்து பாரிஜாதம் ஆதிரையை இந்த வீட்டிற்கு மருமகளாக ஆக்கிய தீருவேன் என்று சபதம் எடுத்தாள். இதற்கிடையே, ஆதிரை பிரியாவை சந்தித்து கல்யாண சம்பந்தமான விஷயத்தை சொன்னாள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.