Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!-sun tv serial marumagal serial nadagam latest today august 4 2024 episode promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 05, 2024 11:19 AM IST

Marumagal Serial: சிவப்பிரகாசம், தில்லையை சந்திக்க சென்றார். இருவரும் தங்களுடைய நீண்ட நாள் நட்பு குறித்து சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். -மருமகள் சீரியலில் இன்று!

Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!
Marumagal Serial: ‘முரண்டு பிடிக்கும் மனோகரி.. திணறும் ஆதிரை;சின்னாபின்னமான சிவபிரகாசம்!-மருமகள் சீரியலில் இன்று!

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன? 

மனோகரி, பத்திரத்தை அடமானம் வைக்க தர மாட்டேன் என்று மறுக்க, சிவப்பிரகாசம் டென்ஷன் ஆனார். இதையடுத்து அந்த பத்திரமானது ஆதிரைக்கு சொந்தமானது. ஆகையால் அதை கண்டிப்பாக தரவேண்டும் என்று கறாராகச் சொன்னார் பிரகாசம். ஆனால் மனோகரி கேட்டபாடில்லை. 

இந்த பேச்சுவார்த்தை சண்டையில் முடிய, ஆதிரை எனக்கு அந்த பத்திரம் வேண்டாம். அம்மாவின் மனது கஷ்டப்பட வேண்டாம் என்று சொன்னாள். அப்படியானால், நீ என்ன செய்யப் போகிறாய் என்று ஆதிரையை பிரகாசம் கேட்க, ஏதாவது செய்து கொள்ளலாம் என்று சமாதானம் செய்தாள். 

ஆதிரைக்கு டும் டும்

இதையடுத்து, சிவப்பிரகாசம், தில்லையை சந்திக்க சென்றார். இருவரும் தங்களுடைய நீண்ட நாள் நட்பு குறித்து சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். இதையடுத்து சிவப்பிரகாசம், கௌரி இறந்த பின்னர் மனோகரியை தான் கல்யாணம் செய்து கொண்டதையும், கௌரியின் மகள் தான் ஆதிரை என்பதையும் சொல்கிறான். 

இந்த நிலையில், தில்லை தன்னுடைய மூத்த மகனாக பிரபுவுக்கு ஆதிரையை கல்யாணம் முடித்துக் கொடுக்க சிவபிரகாசத்திடம் கேட்கிறான்.  அதற்கு சம்மதம் சொல்லும் சிவப்பிரகாசம், ஆதிரையிடம் ஒரு வார்த்தை கேட்டு விட்டு முழு சம்மதத்தை சொல்வதாக சொன்னார். இதற்கிடையே பிரபு கைரேகை பார்க்கச் சென்றான். கைரேகை ஜோசியர், கிழக்கிலிருந்து உங்களுக்கு வரன் வரப்போகிறது. கல்யாண திசையும் கூடி வந்திருக்கிறது என்றார். 

மற்றொரு பக்கம், வீட்டில் நடந்த சண்டையின் காரணமாக, மனோகரியின் குழந்தைகள் சாப்பிட மறுத்தனர். இதையடுத்து அங்கு வந்த ஆதிரை அவர்களை சமாதானம் செய்தாள். இதற்கிடையே மனோகரி இடம் குறித்த பிரச்சினையை குறித்து இழுக்க, ஆதிரை அவளை பக்குவமாக சமாதானம் செய்து கொண்டு வந்தாள். 

இதற்கிடையே உள்ளே வந்த சிவப்பிரகாசம் இவள் கையால் சமைத்த சாப்பாட்டை நான் சாப்பிட மாட்டேன். அவள் அதில் விஷம் கலந்தாலும், கலந்திருப்பாள் என்று சாடினார். அதனால் இனிமேல் இவள் கையால் நான் சாப்பிடவே மாட்டேன் என்று சொல்லி, அடம்பிடித்து சென்று விட்டார். இதையடுத்து என்ன நடக்கிறது என்பதை இன்று பார்க்கலாம்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.