Marumagal serial: ‘கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!-sun tv marumagal serial nadagam latest today august 7 2024 episode promo - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Marumagal Serial: ‘கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ‘கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 07, 2024 06:15 PM IST

Marumagal serial: ஆதிரை, அவர்களை அடித்து ஓட விட்டது போல உன்னையும் ஓட விட்டு விடுவேன் என்று சொல்ல,வேள்விழியோ, நான் உன் போல கையால் அடிக்க மாட்டேன். - மருமகள் சீரியலில் இன்று!

Marumagal serial: ‘கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!
Marumagal serial: ‘கல்யாணத்திற்கு மட்டை போடும் மனோகரி.. உச்சக்கட்ட கோபத்தில் சிவப்பிரகாசம்- மருமகள் சீரியலில் இன்று!

மறுபக்கம் பிரபு பெண்பார்க்க வர சம்மதித்தாலும், அதற்கு ஒரு கண்டிஷனையும் வைத்து, முட்டுக்கட்டை போடுகிறான். ஆனால், அவனை சாமி ஒரு வழியாக சமாதானப்படுத்தி வழிக்கு கொண்டு வருகிறான். இவ்வாறான நிகழ்வுகள் புரமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?

மருமகள் சீரியலில், சிவபிரகாசத்துக்கு போன் செய்யும் தேவா, உனது வாட்டர் கேன் வண்டியை பிடித்து வைத்திருப்பதாக சொன்னதோடு, உடனே நீ சம்பவ இடத்திற்கு, உன் மகளோடு வரவேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தான். இதை கேள்விப்பட்ட சிவப்பிரகாசம் ஆதிரைவிடம் போன் செய்து, சம்பவத்தை விளக்குகிறார்.

மேலும் தான் அங்கு சென்று பிரச்சினையை சமாளிப்பதாகவும் சொல்ல, ஆதிரை தானும் உங்களுடன் வருவதாக சொன்னாள். அதற்கு சிவப்பிரகாசமோ வேண்டாம்மா.. நானே சென்று பிரச்சினையை சமாளிக்கிறேன் என்று சொல்கிறார். ஆனாலும், கேட்காத ஆதிரை, நான் கண்டிப்பாக வருவேன் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் சிவப்பிரகாசம் ஓகே என்று சொல்கிறார்.

ஆக்‌ஷன் ப்ளாக்கில் ஆதிரை

முதலில் சிவப்பிரகாசம் சம்பவ இடத்திற்கு செல்ல, தேவா அங்கே வீடியோ பார்த்துக் கொண்டு அவரை கிண்டல் அடித்துக் கொண்டிருந்தான். இந்த நிலையில் சிவப்பிரகாசம், தேவா நீ செய்வது கொஞ்சம் கூட சரியல்ல. இப்படி வாட்டர் கேன் வண்டியை பிடித்து வைத்துக் கொண்டு, என்னுடைய தொழிலை கெடுப்பது நல்லதல்ல என்று சொல்ல, டென்ஷன் ஆன தேவா நான் உன்னிடம் அப்போதே சொல்லி இருக்கிறேன். ஏரியா விட்டு ஏரியா வாட்டர் கேன் போடக்கூடாது என்று.. அப்படி இருக்கையில், நான் சொன்ன பிறகும் நீ வாட்டர் கேன் பிசினஸ் இங்கு நடத்தினால் உன்னை என்ன செய்வது என்று கேட்கிறான்.

அதற்கு சிவப்பிரகாசம் அந்தப் பிரச்சினையை நாம் அப்போதே பேசி முடித்து விட்டோம். அப்படி இருக்கையில், இப்போது நீ எதற்கு பிரச்சினை செய்கிறாய் என்று கேட்டார். இந்த நிலையில் தேவா உன்னுடைய மகள் எங்கே என்று கேட்க, அவளை எதற்கு கேட்கிறாய் என்று கொந்தளித்தார் சிவப்பிரகாசம். இதையடுத்து தன்னுடைய ஆட்களை வாட்டர் கேனை குத்தி கிழிக்குமாறு தேவா சொல்ல, அதனை சிவப்பிரகாசம் தடுத்தார். ஒரு கட்டத்தில் சண்டை முற்ற, ஆட்களிடம் சிவப்பிரகாசத்தை குத்துமாறு சொன்னான் தேவா.

ஆதிரை சைக்கிளில் வந்து கத்தியை தட்டி விட்டாள்.

இதையடுத்து சிவப்பிரகாசத்தை அடியாட்கள் கத்தியால் குத்த, கத்தி கிட்டத்தட்ட சிவப்பிரகாசத்தின் உடலுக்கு அருகே வந்த பொழுது, குறுக்கே ஆதிரை சைக்கிளில் வந்து கத்தியை தட்டி விட்டாள். அதன் பின்னர் அங்கு பெரிய ஆக்சன் ப்ளாக்கே நடந்தது. அடியாட்களை ஆதிரை வெளுத்து, தேவாவையும் மிரட்டினாள்.

அதன் பின்னர் தான், இது வேள்விழி நடத்திய சதி என்பது தெரிய வந்தது.இந்த நிலையில் வேல்விழியின் காரை வழிமறித்த ஆதிரை, இதெல்லாம் உன் வேலை தானே என்று சொல்ல, அவளோ எதுவும் தெரியாதது போல நடித்தாள். இதையடுத்து ஆதிரை அவர்களை அடித்து ஓட விட்டது போல, உன்னையும் ஓட விட்டு விடுவேன் என்று சொல்ல, வேள்விழ்யோ, நான் உன் போல கையால் அடிக்க மாட்டேன். நான் உன்னுடைய மனதில் அடிப்பேன். அந்த மனதின் அடி உனக்கு மரண அடியாக அமையும் என்ற எச்சரித்தாள்.

தொடர்ந்து, சிவப்பிரகாசம் ஆதிரையிடம் சூப்பர் மார்க்கெட் எல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம், நீ கல்யாணத்திற்கு சம்மதி என்று சொல்ல, வேறு வழியில்லாமல் அப்பாவின் சந்தோஷத்திற்காக, ஆதிரை கல்யாணத்திற்கு சம்மதிக்கிறார். இந்த விஷயத்தை சிவப்பிரகாசம் தில்லையிடம் சொல்ல, தில்லை மிகவும் சந்தோஷம் அடைகிறான்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.