Vijayakanth: மதுபாட்டில்களில் சிறுமியின் படத்தை ஒட்டுங்கள் - விஜயகாந்த் வலியுறுத்தல்
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமியின் புகைப்படத்தை மதுபாட்டிலில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளியான பிரபு. இவருக்கு 17 வயதில் பிரகாஷ் சென்ற மகனும், 16 வயதில் விஷ்ணுபிரியா என்ற மகளும் உள்ளனர். விஷ்ணு பிரியா தற்போது நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்று இருந்தால்.
விஷ்ணு பிரியாவின் தந்தை பிரபு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விஷ்ணு பிரியா வீட்டில் யாரும் இல்லாத போது, தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து விசாரணை செய்தபோது, சிறுமி விஷ்ணுபிரியா எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில், எனது மரணத்திற்கு யாரும் காரணம் கிடையாது. எனது ஆசை என்னவென்றால் எனது அப்பா குடிப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். எனது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும் என அந்த சிறுமி உருக்கமாக அதில் எழுதி வைத்திருந்தார்.
சிறுமியின் இந்த கடிதம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பலரும் மதுவுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர். அன்புமணி ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் மதுபானம் குறித்து எதிர்ப்பு கண்டனங்கள் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிறுமி விஷ்ணு பிரியாவின் புகைப்படத்தை மது பாட்டில்களின் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் மாவட்டம் சின்ன ராஜா குப்பம் பகுதியைச் சேர்ந்த சிறுமி விஷ்ணுபிரியா, தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியைக் கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.
தந்தையின் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்த சிறுமி விஷ்ணு பிரியாவின் படத்தை மது பாட்டில்களில் ஒட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதுபாட்டில் ஒட்டப்படும் சிறுமியின் புகைப்படத்தை பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் தனது மதுப் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
அனைத்து டாஸ்மாக் கடைகளின் முன்பு சிறுமியின் புகைப்படத்தை வைக்க வேண்டும். அதனைப் பார்த்தாவது ஒவ்வொரு தந்தையும் மதுக் குடிக்கும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்