போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது..அடிபட்ட பிசாசு பட நடிகை, மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் பெயர்! மலையாள சினிமா அடுத்த அதிர்ச்சி
கொச்சியில் போதை பொருளுடன் கேங்ஸ்டர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் பிசாசு பட நடிகை, மஞ்சுமோல் பாய்ஸ் நடிகர் பெயர் அடிபட்டிருக்கும் நிலையில் போலீசார் அவர்களை விசாரணை வளையைத்துக்கு கொண்டு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மலையாள சினிமாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்கள், அத்துமீறல்கள் குறித்து ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி புயலை கிளப்பியது. இதன் பின்னர் தற்போது மலையாள சினிமாவில் போதை பொருள் பயன்பாடு குறித்து அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை போதை பொருள்களை பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சையில் மஞ்சும்மல் பாய்ஸ் படப்புகழ் நடிகர் ஸ்ரீநாத் பாஸி, தமிழில் பிசாசு படத்தில் நடித்த பிராயாக மார்டின் ஆகியோரின் பெயர் அடிபட்டுள்ளது.
பிரபல ரவுடி கைது
கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டடலில் ரவுடி கும்பல் தலைவரான ஓம்பிரகாஷ் என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவருடன் கூட்டாளி ஷிஹாஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இருவரும் மீது ஏற்கனவே 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.