Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்-insta fame dhivakaran about biggboss 8 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்

Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்

Malavica Natarajan HT Tamil
Sep 23, 2024 11:34 AM IST

Bigg Boss 8: விஜய் டிவியில் இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் 8 வது சீசன் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்நிலையில், இந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டால் நிச்சயம் நான் தான் வெற்றி பெறுவேன் என இன்ஸ்டாகிரம் பிரபலம் திவாகரன் கூறியுள்ளார்.

Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்
Bigg Boss 8: இது விஜய் டிவியின் சஸ்பெண்ஸ்... உள்ள நுழைஞ்சா வின்னர் நான் தான்... சவால் விடும் பிரபலம்

சட்டம் என் கையில்

காமெடி நடிகரான சதிஷ், கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் சட்டம் என் கையில், சஸ்பெண்ஸ் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதன் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வைபவ்வின் சிக்ஸர் திரைப்படத்தை இயக்கிய சாச்சி இத்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். அப்போது இன்ஸ்டாகிரம் பிரபலம் திவாகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், நடிகர் சதிஷ் அண்ணாவிற்கு இந்தப் படம் பெரிய திருப்பு முனையாக அமையும். படத்தின் செகண்ட் ஆப் சான்ஸே இல்ல. இந்தப் படத்திற்கு பொதுமக்கள் கிட்ட இருந்து நல்ல அங்கிகாரம் கிடைக்கும். இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் சதிஷ் அண்ணா ஆக்சிடன்ட் ஆகி அழம் காட்சி நன்றாக இருந்தது எனக் கூறி அதை நடித்தும் காட்டினார்.

பிக்பாஸில் பங்கேற்க அழைப்பு?

பிக்பாஸ் பற்றி கேள்வி எழுப்பிய நிலையில், பிக்பாஸ் என்ற உடன் பல மீடியாக்களும் நான் பிக்பாஸில் கலந்து கொள்ள போகிறேன் என என்னுடைய பேரை போட்டியாளர்கள் லிஸ்ட்டில் கூறி வருகின்றனர். இதுகுறித்த அதிகராரப்பூர்வ அறிவிப்பு இன்னும் எனக்கு வரவில்லை. ஆனால், அதிகளவில் என்னுடைய பெயர் அடிபடுகிறது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. 200 யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்துள்ளேன். ஏகப்பட்ட கேலி கிண்டல்களை கடந்து நான் வெற்றி பாதையில் வந்து கொண்டிருக்கிறேன். வாய்ப்பு கிடைத்து நான் பிக்பாஸ் வீட்டிற்குள் போனால் கண்டிப்பாக வெற்றி எனக்குத் தான்.

விஜய் டிவி எல்லா முடிவுகளையும் எப்போதும் ரகசியமாகத் தான் லைத்திருக்கும். கடைசி நொடி வரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சோ நீங்க தைரியமா இருங்கன்னு ரசிகர்களும், மீடியாக்களும் சொல்றாங்க. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. அதனால வெயிட் பண்றேன். என ஆவலாக கூறியுள்ளார் திவாகரன்.

வாய்ப்புகள் அதிகம்

இவர் முன்னதாக விஜய் டிவியின் பல ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று இருப்பதால், கண்டிப்பாக இவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் வாய்ப்பு காத்திருக்கலாம் என பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. அதே வேளையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான ஆரம்ப தேதி முடிவு செய்து அறிவிக்கப்பட்டதால், நிச்சயம் அனைத்து போட்டியாளர்களிடமும் பேசி இருப்பார்கள். எனவே, போட்டியாளர்கள் பட்டியல் முன்னதாகவே முடிவு செய்யப்பட்டிருக்கும் என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இதனால், பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் அந்த போட்டியாளர்கள் யார் என்பதைக் காண ரசிகர்கள் வரும் அக்டோபர் 6ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியம்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner